Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் அடுத்த மிருகண்டா அணையில் இருந்து 65 கன அடி தண்ணீர் திறப்பு!

கலசபாக்கம் ஒன்றியம் ஜவ்வாதுமலை அடிவாரத்தில் உள்ள மேல் சோழங்குப்பம் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள மிருகண்ட அணையின் முழு கொள்ளளவு 23 அடியாகும்.

தற்போது வடகிழக்கு பருவமழையின் காரணத்தால் மலைப்பகுதியில் இருந்து சுமார் 40 கன அடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருப்பதால் அணையில் 18.5 அடிக்கு மேல் தண்ணீர் நிரம்பி வருகின்றன. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி சுமார் 65 ககன அடி தண்ணீர் நேற்று முன்தினம் இரவு முதல் திறக்கப்பட்டுள்ளது.

 இதனால் அணையின் அருகே உள்ள பல்வேறு கிராமங்களில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் சென்று நிரம்பி வருவதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *