Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே பழங்கோவில்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே “சப்த கைலாசங்கள்’ மற்றும்  சப்த கரைகண்டேஸ்வரர்” கோவில்கள் உள்ளன. அன்னை காமாட்சி சிவபெருமானின் இடப்பாகம் பெற காஞ்சிபுரம் இருந்து திருவண்ணாமலைக்கு வரும் போது வாழைப்பந்தலில் மண்ணால் சிவலிங்கம் பிரதிட்டை செய்து வழிபட்டார். அப்போது அவரது வழிபாட்டிற்கு தண்ணீர் தேவைப்பட்டது. உடனே முருகப்பெருமான் தன் கூர்வேலை எய்ய, ஜவ்வாது மலையில் இருந்து ஆறு ஊற்றெடுக்கிறது. அந்த நேரத்தில் அந்த இடங்களில் சப்த முனிகள் தவம் செய்து கொண்டிருந்தனர். அவர்களின் குருதி தான் ஆற்றில் கலந்தது. அவர்கள் வழிபட்டுக்கொண்டிருந்த “சப்த கைலாசங்கள்” தலங்கள் என்றனர். ஆற்றின் நிறம் செந்நிறமாக இருந்ததால் செய்யாறு என பெயர் பெற்றது. ஆற்றின் நிறத்தை மாற்றவும் முருகப்பெருமான் சாபம் நீங்கவும் பிரதிட்டை செய்து வழிபட்ட தலங்கள்” சப்த கரைகண்டேஸ்வரர்” தலங்கள் ஆகும். இந்த சப்த கைலாசங்கள் மற்றும் சப்த கரைகண்டேஸ்வரர் ஆலயங்கள் பின்வருமாறு:

சப்த கைலாசநாதர் திருக்கோயில்கள்(தென்கரை)

1.நார்த்தாம்பூண்டி
2.வாசுதேவன்பட்டு
3.தாமரைபாக்கம்(கடலாடி அருகே)
4.கரைபூண்டி
5.மண்டகொளத்தூர்.
6.பழங்கோவில்.
7.தென்பள்ளிபட்டு

சப்த கரைகண்டேஸ்வரர் கோவில்கள்(வடகரை)

1. காஞ்சி(திருவண்ணாமலை மாவட்டம்)
2. கடலாடி
3.தென்மகாதேவமங்கலம்
4. மாம்பாக்கம்
5.குருவிமலை
6.எலத்தூர்
7.பூண்டி.

இதில் நார்த்தாம்பூண்டி கைலாசநாதர் கோயிலில் நாரதர் தவம் செய்ததாக கூறப்படுகிறது. பழங்கோவில் இறைவன் பெயர் பலக்ராதீஸ்வரர் என உள்ளது. சோழ மன்னன் தன் கையில் பலம் குன்றிய போது பழங்கோவில் சுவாமியை வழிபட்டு பலம் பெற்றதாகவும் எனவே பலக்ராதீஸ்வரர் என பெயர் வந்ததாகவும் கல்வெட்டு கூறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *