Web Analytics Made Easy -
StatCounter

பருவதமலை பாதுகாப்பு குழு சார்பில் வனங்களில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கவும், மரகன்றுகள் நடவும் ஏற்பாடு!

கலசபாக்கம் அடுத்த பருவதமலை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே வெயிலின் தாக்கம் கடுமையான அதிகரித்து வருகிறது . இதனால் வனங்களில் உள்ள விலங்குகள், பறவைகள் தண்ணீர் தேடி அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு வருவதால் அவைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டு நாய்கள் மற்றும் சமூக விரோதிகளால் அவைகளை வேட்டையாடப்படுகிறது.

இதனை தடுக்கும் வகையில் வனப்பகுதியில் ஆங்காங்கே பருவதமலை பாதுகாப்பு குழு சார்பில் முதற்கட்டமாக 15 சிறு தண்ணீர் தொட்டிகள் அமைக்கவும், மரகன்றுகள் நடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .

இந்நிகழ்வில் கலசபாக்கம் நீதிமன்ற நீதிபதி மற்றும் புதுப்பாளையம் வன சரகர் திரு.சுரேஷ் , சமூக ஆர்வளர்கள் திரு.Lic தெய்வசிகாமணி, வக்கீல் திரு.தனஞ்செயன், NGC திரு.பத்மநாபன் ஊராட்சி மன்ற தலைவர் திரு.பன்னீர்செல்வம் மற்றும் பருவதமலை பாதுகாப்பு குழு நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சி முடிவில் பருவதமலையை பாதுகாக்க மலையை சுற்றியுள்ள கிராமத்தில் இருக்கும் இளைஞர்களை ஒன்றிணைந்து இந்த சமூக விரோதிகளை கண்டறிந்து, வனத்தில் தீ வைப்பது வன விலங்குகள் வேட்டையாடுவது, தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா, கஞ்சா எடுத்து செல்லுதல் போன்ற செயல்களை தடுக்க முயற்சி செய்ய வேண்டும் இந்த மலை இந்த பகுதி மக்களுடையது நீங்கள் தான் பாதுகாக்க வேண்டும் என நீதிபதி வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *