திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டம், சப்த கைலாசத்தில் ஒன்றான பழங்கோயில் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ பாலாம்பிகை சமேத ஸ்ரீ பலக்ராதீஸ்வரர் மற்றும் ஸ்ரீ சித்தி கணபதி, ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ முத்தாலம்மன், ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோயில்களுக்கு நிகழும் சுப மங்களம் பொருந்திய சுபகிருது வருடம் ஆனி மாதம் 9 – ஆம் தேதி 23.06.2022 வியாழக்கிழமை காலை 07.30 மணிக்கு மேல் 09.00 மணிக்குள் கடக லக்னத்தில் கிராம தேவதைகளுக்கும் 9:30 மணிக்கு மேல் 11.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் ஸ்ரீ பாலாம்பிகை சமேத ஸ்ரீ பலக்ராதீஸ்வரர் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் பக்தர்கள் அனைவரும் வருகை புரிந்து இறைவனருளை பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நிகழ்ச்சி நிரல்:
• 22.06.2022 – புதன் இன்று மாலை 6 மணியளவில் ஸ்ரீ பொற்சபை நாட்டியாலயா வழங்கும் பரதநாட்டிய நிகழ்ச்சி
• 23.06.2022 – வியாழன் நாளை மாலை 6 மணியளவில் ஆன்மீக நகைச்சுவை பட்டிமன்றம் நடைபெறும்.