இரண்டு வயதிலேயே, தகவல்களைக் கற்றுக்கொள்வதில் தனக்கு இருக்கும் ஆர்வத்தால் ஆன்லைன் போட்டிகள், மாவட்ட அளவிலான போட்டிகளில் பரிசு, பாராட்டுகள் பெற்று வருவதோடு மட்டுமன்றி `கலாம் உலக சாதனை விருது’, `இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ ஆகிய இரு சாதனைப் புத்தகங்களிலும் இடம் பிடித்து அசத்தியுள்ளார் நமது கலசபாக்கத்தை சேர்ந்த மகேந்திரன் – லாவண்யா தம்பதியின் குழந்தை 2 வயதே ஆகும் சனந்தா!
குட்டி சனந்தாவின் சாதனைப் பயணம் குறித்து அவரின் அம்மா லாவண்யாவிடம் கூறியதாவது ..
7 நாட்டின் தேசிய சின்னங்கள், காய்கறிகள், வாகனங்கள், பொதுப் பொருள்கள், விளையாட்டுகள், பழங்கள், பறவைகள் போன்றவற்றை கண்டறிந்து கூறுவது, 25 சைகை மொழிகளை செய்து காண்பிப்பது, 12 விலங்குகளோட சத்தங்களை அறிவது, ஆங்கில அல்ஃபபெட்கள், ஒன்று முதல் பத்து வரையிலான எண்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சொல்வது போன்ற விஷயங்களை பண்ணியிருந்தாங்க.
அதன் பின், `Extraordinary Grasping Power Genius Kid’ என்று கலாம் உலக சாதனை புத்தகத்தில் இருந்து விருது கொடுத்தாங்க. இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இருந்து பாராட்டி சான்றிதழ் கொடுத்தாங்க.
சமீபத்துல, பெல்ஸ் அகாடமி நடத்திய ஆன்லைன் போட்டியில் சனந்தா திருக்குறள் ஒப்பித்தாங்க. `The Whiz Kids’ ஆன்லைன் போட்டியில் கலந்துகொண்டு பரிசு வாங்கினாங்க. தேசிய அளவிலான குழந்தைகள் புதிர்ப்போட்டியிலும் கலந்துக்கிட்டாங்க. அதுக்கு அப்புறமா நமது திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் சாரை பார்த்து வாழ்த்துப் பெற்றோம்..இது எல்லாமே எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு...என தனது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார்
மழலை சனந்தாவின் சாதனைப் பயணம் தொடர கலசப்பாக்கம்.காம்'ன் மனமார்ந்த வாழ்த்துக்கள்.