பருவத மலையை தூய்மைபடுத்தும் பணி: மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் பங்கேற்பு
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த தென்மகாதேவமங்கலம் கிராமம் அருகில் 4500 அடி பருவத மலையில் அருள்மிகு ஸ்ரீ மல்லிகார்ஜுனர் சிவன் உடனுறை பிரமராம்பிகை தாயார் குடிகொண்டுள்ளார். அம்மலையை சுற்றி 25 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட கிரிவல பாதை உள்ளது. கிரிவலம் சுற்ற வரும் பக்தர்களும், பொதுமக்களும் வீசி சென்ற நெகிழி பொருட்களை மாவட்ட ஆட்சியர் திரு.கே.எஸ். கந்தசாமி தலைமையில் பர்வத மலையில் தூய்மைபடுத்தும் பணியில் ஈடுபட்டார்.
இப்பணியில் தூய்மை கலசப்பாக்கம் இயக்கம், பசுமை இயக்கம், சமூக ஆர்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என 1500-க்கும் மேற்பட்டவர்கள் இணைந்து காலை 6:30 மணிமுதல் தூய்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர்.
தூய்மைபடுத்தும் பணியில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் மற்றும் கழக நிர்வாகிகளும் பங்கேற்றனர்.