Web Analytics Made Easy -
StatCounter

மார்கழி மாத பிறப்பை ஒட்டி பருவதமலை சுற்றி 26 கிலோமீட்டர் தூரம் பக்தர்கள் கிரிவலம்!

கலசபாக்கம் அடுத்த தென்மாதிமங்கலம் மற்றும் கடலாடி இடையே அமைந்துள்ள பருவதமலை 4560 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இதில் பிரம்ம சமேத மல்லிகார்ஜுனார் கோவில் உள்ளது. நேற்று (17.12.2023) மார்கழி மாத பிறப்பை ஒட்டி பருவதமலை சுற்றி 26 கிலோமீட்டர் தூரம் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். பலர் வயல்கள் வழியாகவும் சென்றனர். மலை சுற்றும் பக்தர்களுக்கு பல இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.

இங்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பௌர்ணமி மற்றும் வார விடுமுறை நாட்களில் மலை ஏறி சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

கலசபாக்கத்தை சுற்றியுள்ள கோவில்களில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *