Web Analytics Made Easy -
StatCounter

பிரதம மந்திரி மானிய விலையில் சூரிய ஒளி மின்சார திட்டம்!

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நகரில் மாண்புமிகு பாரத பிரதமரின் சூரிய வீடு இலவச திட்டத்தின் கீழ் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் மானியத்துடன் (1 கிலோவாட் = 30000, 2 கிலோவாட்= 60000/-, 3 கிலோவாட் மற்றும் அதற்கு மேல் = 78000/- ) கூடிய சோலார் பேனல் பொருத்தி மின் கட்டணத்தை குறைப்பதற்காக விண்ணப்பம் பதிவு செய்யும் சிறப்பு முகாம் நாளை 02-03-2024 காலை 10.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை நடைபெறும்.

போளூர் கோட்டத்திற்கு உட்பட்ட நகரம் / போளூர் உபகோட்டம், கிராமியம் / போளூர் உபகோட்டம், கலசபாக்கம் உபகோட்டம், ஆதமங்கலம் உபகோட்டம் அலுவலகங்களில் முறைய போளூர், கலசபாக்கம், ஆதமங்கலம் உபகோட்டம் அலுவலங்கங்களில் நடைபெற உள்ளது. எனவே பொது மக்கள் ஏற்கனவே மின் கட்டணம் செலுத்திய இரசீதுடன் கலந்து கொண்டு விண்ணப்பம் பதிவு செய்து கொள்ளலாம்.

நாள்: 02.03.2024

இடம்: கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகம் அருகில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *