Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கத்தில் இன்று மக்களுடன் முதல்வர் முகாம்!

கலசபாக்கத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் இன்று (30.07.2024) S.K மஹால் நடைபெற்று வருகிறது. முகாமில் கலந்து கொள்பவர்கள், தங்களது கோரிக்கைகளை கணினியில் பதிவு செய்ய வேண்டியிருப்பின், அக்கோரிக்கைக்கான அனைத்து ஆவணங்களையும் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும்.

வழங்கப்படும் சேவைகள்:

தமிழ்நாடு மின்சார வாரியம்

    • புதிய பின் இணைப்பு
    • மின் கட்டண மாற்றங்கள்
    • மின் இணைப்பு பெயர் மாற்றம்
    • கூடுதல் மின் பளு கட்டணங்கள்

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை

    • இணைய வழி பட்டா மாறுதல்
    • நில அளவீடு
    • வாரிசுச் சான்றிதழ் / சாதிச் சான்றிதழ் / வருமானச் சான்றிதழ்/ இருப்பிடச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்கள்
    • முதியோர் / விதவை/ கணவனால் கைவிடப்பட்டவர்/ மாற்றுத் திறனாளி/ முதிர்கன்னி / மூன்றாம் பாலினத்தோருக்கான உதவித் தொகைகள்
    • பிறப்பு, இறப்பு காலதாமதாக பதிவு செய்தல்
    • பட்டா,சிட்டா நகல்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

    • வீட்டு வரி, குடிநீர் வரி பெயர் மாற்றங்கள்
    • குடிநீர் கழிவுநீர் இணைப்பு
    • கட்டுமான ஒப்புதல்
    • திடக்கழிவு மேலாண்மை திட்டம்
    • வர்த்தக உரிமம் வேண்டி

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை

  •  குடும்ப அட்டையில் பெயர் மாற்றம் மற்றும் முகவரி திருத்தம்

வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை

    • கட்டுமான வரைபட ஒப்புதல்
    • நில வகைப்பாடு மாற்றத்திற்கான ஒப்புதல்
    • தமிழ்நாடு நகர்புற வழ்விட மேம்பாட்டு வாரிய வீடு வேண்டி விண்ணப்பம்
    • வீட்டுவசதி வாரியத்தால் வழங்கப்பட்ட ஒதுக்கீடுகளுக்கான விற்பனை பத்திரம்

காவல் துறை

    • பொருளாதார குற்றங்கள் தொடர்பான புகார்கள்
    • நில அபகரிப்பு மற்றும் மோசடி தொடர்பான புகார்கள்
    • போக்சோ சட்டத்தின் கீழ் புகார்கள்

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை

    • மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை
    • பராமரிப்பு உதவித் தொகை
    • மாற்றுத் திறனாளிக்கான பெட்ரோல் ஸ்கூட்டர் தொடர்பான கோரிக்கைகள்
    • சக்கர நாற்காலி, மூன்று சக்கர வண்டி. செயற்கைக் கால், காது கேட்கும் கருவி, இதர உதவி உபகரணங்கள் தொடர்பான கோரிக்கைகள்
    • சுய தொழில் வங்கிக் கடன் உதவி

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை

    • புதுமை பெண் கல்வி உதவித் திட்டம்
    • பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்
    • ஆதரவற்றோருக்கான உதவித் தொகை

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை

    • கல்வி உதவித்தொகை
    • வீட்டு மனை / இணைய வழிபட்டா

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை

    • டாம்கோ / டாப் செட்கோ கடனுதவிகள்
    • கல்வி உதவித்தொகை

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை

  • முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் (CMCHIS)

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை

    • நுண்ணீர்ப்பாசனம் தொடர்பான கோரிக்கைகள்
    • கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம்
    • பட்டியலின / பழங்குடியின விவசாயிகளுக்கு நீர் ஆதாரம் உண்டாக்குதல்
    • தமிழ்நாடு சிறுதானிய இயக்கம்
    • வீட்டுத்தோட்டம் அமைத்தல்
    • இ-வாடகை

கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மீனவர் நலத்துறை

        • மீனவர் நலத்திட்டங்கள்
        • சிறிய அளவிலான நாட்டு கோழி பண்ணைகள் நிறுவும் திட்டம்

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை

        • நல வாரியங்களில் உறுப்பினர் பதிவு
        • பதிவு புதுப்பித்தல்
        • உதவித் தொகை/ ஓய்வூதியம்

வாழ்வாதார கடன் உதவிகள்

        • மகளிர் சுய உதவிக் குழு கடன்
        • கூட்டுறவு சங்கங்களின் மூலம் கடனுதவி
        • மாற்றுத்திறனாளிகளுக்கான சுய தொழில் வங்கி கடன் உதவி
        • தாட்கோ கடனுதவி
        • தொழில் முனைவோருக்கான கடனுதவி

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *