Web Analytics Made Easy -
StatCounter

பணி அறக்கட்டளையின் முதல் மைல்கல்!!!

பணி அறக்கட்டளையின் முதல் மைல்கல்!!!

லயன்ஸ் மற்றும் ரோட்டரி க்ளப் உடன் இணைந்து பணி அறக்கட்டளை நடத்திய *2021ஆம் வருட மாணவர் சேர்க்கை* தொடர்பான பதிவு.

21-02-2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடந்த நேர்முக காணலில் பல்வேறு ஊர்களை சேர்ந்த மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அதன் முடிவில் 12 வறிய கிராமப்புற மாணவர்கள் பணி அறக்கட்டளையின் 1 வருட இலவச AC தொழிற்சார் கல்வி, பயிற்சி, வேலைவாய்ப்பு, இலவச உணவு, தங்குமிடத்துடன் வழங்கும் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். பயிற்சி மார்ச் முதல் தேதியில் தொடங்கவிருக்கிறது.

ஒரு வருடத்திற்குப் பிறகு இச்சமுதாயத்தில் *வேலைவாய்ப்புடனும், கூடிய விரைவில் சிலர் தொழில்முனைவர்களாக* மலருவார்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த பணியை துவங்கியுள்ளோம்..

கிராமப்புற வறிய மாணவர்களின் வாழ்வியலை மாற்றும் ஊன்றுகோல் இதுவே! மேலும் இது போல் சிறந்து செயல்பட எங்களுக்கு ஆதரவு தாருங்கள்.

நன்றி
Dr.A.ஜான் வின்சென்ட்
நிறுவனர்
பணி அறக்கட்டளை
91764 48822

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *