கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (16.05.2025) கலசபாக்கம் உள்வட்டம் முதல் நாள் வருவாய் தீர்வாயம் பசலி எண் 1434-ற்கான ஜமாபந்தி நடைபெற்று வருகிறது. வருவாய் தீர்வாய அலுவலர் மற்றும் வருவாய் கோட்ட அலுவலர்களிடம் பொதுமக்கள் தங்கள் தேவைகளையும், குறைகளையும் மனுக்களாக அளித்தனர்.
கலசபாக்கம், விண்ணுவாம்பட்டு, பில்லூர், தென்பள்ளிபட்டு, காப்பலூர், பாடகம், ஆனைவாடி, காலூர், லாடவரம், கெங்கநல்லூர், பூண்டி,பிராயம்பட்டு, வன்னியனூர், பத்தியவாடி, படியம்புத்தூர், சீட்டம்பட்டு,பழங்கோவில்,கீழ்பொந்தரை,அலங்காரமங்கலம் காம்பட்டு,அணியாலை ஆகிய கிராமப் பகுதிகள் இன்று(16.05.2025) நடைபெற்று வருகின்றது.
கலசபாக்கத்தில் ஜமாபந்தி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) திரு. குமரன் அவர்களின் தலைமையில் இன்று துவங்கியது. உடன் வட்டாச்சியர் திருமதி. தேன்மொழி, அரசு அலுவலர்கள் உள்ளனர்.