தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (01.08.2025) தலைமைச் செயலகத்தில் வீடியோ கான்பிரென்ஸ் வாயிலாக, திருவண்ணாமலையில் ரூ.37 கோடி மதிப்பீட்டில் மினி டைடல் பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டினார்.
இது 63,200 சதுர அடி கட்டிடப்பரப்பளவில் அமைக்கப்படுகிறது மற்றும் 600 புதிய தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
தமிழ்நாட்டை 2030-ல் டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் இலக்கில் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த முயற்சியின் ஒரு பகுதியாக மினி டைடல் பூங்காக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
இந்த பூங்காக்கள் மூலம் உள்ளூர் இளைஞர்கள், குறிப்பாக பெண்கள், தங்கள் மாவட்டத்திலேயே வேலை வாய்ப்புகளைப் பெற முடியும்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எ.வ.வேலு, டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.