கலசப்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில், தை மாதம் ஒன்றாம் நாள் பெரும் பொங்கலை முன்னிட்டு இன்று சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. இதனை முன்னிட்டு சந்திரசேகர் மற்றும் அம்பாளுடன் எழுந்தருளிய சுவாமி, பக்தர்களுக்கு அருள்பாலித்து காட்சியளித்தார்.
இதனைத் தொடர்ந்து அரசமரம் விநாயகர் கோவிலில் தீர்த்தவாரி நடைபெற்று சொர்க்க நாராயண கோவிலில் வைத்துள்ளனர். இன்று இரவு சீர் வரிசைகளுடன் மீண்டும் ஆலயத்திற்கு வந்தடையும்.




