கலசபாக்கம் அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் இன்று தை மாதம் இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு திருமாமுடீஸ்வரர் திரிபுரசுந்தரி அம்பாளுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து சன்னதி தெருவில் மூன்று முறை வலம் வந்து திருவூடல் நடைபெற்றது. இன்று இரவு காக்கங்கரை விநாயகர் கோவிலில் விநாயகருக்கு பூஜைகள் நடைபெற்று மீண்டும் ஆலயத்திற்கு வந்து மறுவூடல் நடைபெறும்.




