கலசபாக்கம் அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் சிறப்பான தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 147 மாணவர்கள் தேர்வு எழுதியதில், 134 மாணவர்கள் தேர்ச்சி பெற்று 91.2 சதவீத தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது.
இதில் மாணவர் ஆர். வேடியப்பன் 531 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் இடத்தை பிடித்துள்ளார். தொடர்ந்து கிருஷ்ணன் 522 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடமும், C. அருணாச்சலம் 515 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடமும் பெற்றுள்ளனர்.
மேலும், வரலாறு பாடப்பிரிவில் இரண்டு மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். சிறப்பாக தேர்ச்சி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் பாராட்டினர்
Recent News:
கலசபாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 98% தேர்ச்சி!
பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் தேதி அறிவிப்பு!
12-ம் வகுப்பு தேர்வில் திருவண்ணாமலை மாவட்டம் 92.87% தேர்ச்சி!
பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம்!
Can Chia Seeds Help With Weight Loss? Here’s What You Should Know
Gold Prices Remain Steady in Chennai; Silver Rate Increases on May 8, 2026 Morning
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

