Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் அறிமுகம்

கடலோரத்திலோ ஆற்றின் ஓரத்திலோ உள்ள பகுதியில் தென்னை, பனை அல்லது பாக்கு மரங்கள் சூழ்ந்த தோப்புகள் இருக்கும். இது போன்ற நில அமைப்பு கொண்ட ஊர்களை பாக்கம் என்று அழைத்துள்ளனர். கலசபாக்கம் செய்யாற்றின் கரையில் அமைந்துள்ள அழகான ஊர்.

கலசபாக்கம் - திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் ஒரு இரண்டாம் நிலை நகராட்சி ஆகும். கலசப்பாக்கம் வட்டத்தின் தலைநகரும் இதுவே ஆகும். புனித நகரமாக கருதப்படும் இந்நகரில் திருமாமுதீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதி தமிழகத்தின் பழமையான தொகுதிகளில் ஒன்றாகும். இது 1941ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

கலசபாக்கம்: தொன்மை மற்றும் இயற்கை வளம்

இந்த ஜவ்வாது மலை தொடர்ச்சியான பருவத மலையின் அடிவாரத்தில் கரிகால சோழனின் வீர வரலாறு தொடங்குவதாகவும் இங்குதான் கரிகாலச் சோழன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட யானைகளை பழக்கியதாகவும் அதன் மூலம் தன்னுடைய நாட்டை மீட்டதாகவும் வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இங்கு வடமாதி மங்களம்,தென் மாதி மங்களம், மாதிமங்களம் போன்ற பெயர்களையுடைய ஊர்களைப் பார்க்க முடியும்.
மங்களம் என்று முடியும் ஊர்கள் என்பது அக்காலத்தில் அரசர்கள் தானமாக வழங்கப்பட்ட கிராமங்களின் பெயர்கள் என்கிறார்கள்.

இந்த செய்திகளில் மூலம் கலசபாக்கத்தின் தொன்மையம் இயற்கை வளங்களையும் அறிய முடிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *