Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் அருகில் அமைந்துள்ள பருவதமலையில் வருடத்திற்கு ஒருமுறை நிகழும் அற்புத கிரிவலம்!

கலசபாக்கம் அருகில் அமைந்துள்ள பருவதமலையில் வருடத்திற்கு ஒருமுறை நிகழும் அற்புத கிரிவலம் வரும் இன்று மார்கழி 1 (16.12.2024) திங்கட்கிழமை உள்ளூர்,வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பருவதமலை கிரிவலம் வருகின்றார்கள்.

இன்று மார்கழி முதல் நாள் அதிகாலை முதல் பக்தர்கள் பருவதமலை கிரிவலப் பாதையில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். கரடு முரடான பாதைகள் காடும் கிராமங்களும் நிறைந்த பருவதமலை கிரிவலம் பாதை 28 கிலோ மீட்டர் கொண்டவை இது திருவண்ணாமலை கிரிவலத்தை விட அதிகமானது.

4660 அடி உயரம் உள்ள பருவத மலையில் மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் மலை உச்சிக்குச் சென்று மல்லிகார்ஜுனேஸ்வரர் தரிசித்து வருகிறார்கள். பௌர்ணமி, வார விடுமுறை நாட்களில் இங்கு பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

பர்வதமலை அடிவாரமான தென்மாதிமங்கலம் கிராமத்தில் விடியற்காலையில் துவங்கும் கிரிவலம், இதமான குளிரில், அருமையான இயற்கை சூழலில், வயல் வரப்புகள், குக்கிராமங்கள், நீர்வழித் தடங்கள், காட்டுப் பாதைகள் என புண்ணிய பர்வதமலையின் மூலிகை காற்றை அனுபவித்த வண்ணம் நடக்கும் மறக்கமுடியாத கிரிவலம் தெய்வீக அனுபவத்தை தரும் சிறப்பு மிக்கது. இங்கு நடக்கும் வழியெங்கும் அன்பர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *