Web Analytics Made Easy -
StatCounter

தீபத் திருவிழாவின் போது அன்னதானம் வழங்க அனுமதி பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீப திருவிழாவின் போது அன்னதானம் வழங்க அனுமதி பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் திரு. பா. முருகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 23-ஆம் தேதி வியாழக்கிழமை தொடங்குகிறது.

நவ.27-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றமும் டிச.6-ஆம் தேதி மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

இதில் அன்னதானம் வழங்க உத்தேசிக்கும் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் www.foscos.gov.in என்ற இணையத்தளத்தின் மூலமாகவும் மற்றும் திருவண்ணாமலை செங்கம் சாலை பழைய அரசு மருத்துவமனையில் இயங்கும் உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் வளாகத்தில் விண்ணப்பிக்கலாம்.

நவ.26-ம் (செவ்வாய்க்கிழமை) தேதிக்கு பின்னர் அன்னதான விண்ணப்பம் பெற மாட்டாது.

தொடர்புக்கு:
044-237416 | 8047749266 | 9865689838

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *