இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: திருவண்ணாமலை மாவட்டம் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களுக்கு பரம்பரை முறை வழிசாரா அறங்காவலர்கள் நியமனத்திற்கு உரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கோயில் அறங்காவலர் குழு நியமனத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள தகுதிகள் மற்றும் இதர விவரங்களை,
• உதவி ஆணையர் அலுவலகம், இந்து சமய அறநிலையத்துறை, 122/107, திருவூடல் தெரு, திருவண்ணாமலை
• இணை ஆணையர் அலுவலகம், இந்து சமய அறநிலையத்துறை, 4/15, காந்தி நகர், 7வது தெரு, திருவண்ணாமலை
• ஆய்வர் /இந்து சமய அறநிலையத்துறை, 122/107, திருவூடல் தெரு, திருவண்ணாமலை
• ஆய்வர்/இந்து சமய அறநிலையத்துறை, வேணுகோபாலசுவாமி கோயில், செங்கம் நகர்
• ஆய்வர்/ இந்து சமய அறநிலையத்துறை, கோதண்டராமர் திருக்கோயில், ஆரணி நகர் மற்றும் வட்டம்
• ஆய்வர் /இந்து சமய அறநிலையத்துறை, ஆதிபராசக்தி கோயில், பைங்கிணறு, செய்யார் வட்டம்
• ஆய்வர் /இந்து சமய அறநிலையத்துறை, கோட்டை ஆஞ்சநேயர் கோயில், பழைய பேருந்து நிலையம் அருகில் வந்தவாசி
• ஆய்வர்/இந்து சமய அறநிலையத்துறை அண்ணாநகர் அரசினர் ஆதிதிராவிடர் மாணவர் விடுதி எதிரில், கலசபாக்கம் நகர்
ஆகிய முகவரியில் உள்ள அலுவலகத்தில் அலுவலக நாட்களில் பெற்றுக் கொள்ளலாம்.