நூலகத்தை அறிவின் சாளரம் என்று கூறலாம்…
கலசபக்கத்தில் உள்ள கிளை நூலகம் பல்வேறு விதமான தகவல் சேமிப்பு ஊடகங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த நூலகத்தில் பல்வேறு புத்தகங்கள், நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள், கையால் எழுதிய குறிப்பேடுகள், ஆகியவற்றைக் காணலாம்.
கலசபாக்கம் நூலகத்தில் வாசகர்களும் பொதுமக்களும் இந்த நூலகத்தை தொடர்ந்து பயன் படுத்தி கொண்டு வருகிறார்கள். மேலும், மாணவர்கள் ஆசிரியர்கள் ஓய்வு பெற்றவர்கள் அரசு ஊழியர்களும் வயதானவர்கள் முதியவர்களும் நாள்தோறும் நூலகத்திற்கு வந்து படித்து புத்தகங்கள் வாங்கி செல்லகின்றனர்.
இந்த நூலக கட்டிடம் பல வருடங்களுக்கு முன்பு கட்டிய கட்டிடமாக இருப்பதால் மழை காலத்தில் நீர் கசிந்து புத்தகங்கள் சேதமடைகிறது, பல ஆண்டுகளாக புது வண்ணம் பூசாமல் காணப்படுகிறது.
பொதுமக்கள் மற்றும் வாசகர்கள் ஒன்றிணைந்து இதை சீர் செய்ய ஏற்பாடு செய்துள்ளார்கள். இதன் உத்தேசமாக தோராய மதிப்பீடு ரூ. 20000 முதல் ரூ. 25000 வரை செலவு ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு தேவையான நன்கொடையையும் தங்களுடைய பங்களிப்பையும் வாசகர் வட்ட தலைவரிடம் கொடுக்கலாம், இந்த வேலை நடந்து முடிந்தவுடன் இந்த பக்கத்தில் உங்களுடைய விவரங்களை பதிவு செய்ப்படும்.
நம் மக்கள், மாணவர்கள் வளர, வாழ்வாங்க வாழ நம்மால் முடிந்த அளவிற்கு பங்காற்றுவோம்.