Web Analytics Made Easy -
StatCounter

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு..!!

நாடு முழுவதும் மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பாடத்திட்டத்தின் கீழ் படித்து 12ம் வகுப்புத் தேர்வெழுதிய மாணவ,மாணவிகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று (மே 12) வெளியானது. கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி…

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க செல்லும் பக்தர்களுக்கு குட் நியூஸ்!

திருப்பதியில் தற்போது கூட்டம் குறைவாக உள்ளதால் பக்தர்கள் கூட்டம் இல்லாமல் தரிசனம் செய்யும் சூழல் நிலவுகிறது. திருப்பதி திருமலையில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். இரண்டு மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டு திருப்பதிக்கு வருபவர்கள்…

கலசபாக்கம் அடுத்த கரையம்பாடி தடுப்பணையில் நீர் நிரம்பி வழியும் அழகிய காட்சி!

கலசபாக்கம் செய்யாற்றில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையின் காரணமாக நீர் வரத்து அதிகரித்ததால் கரையம்பாடி தடுப்பணையில் நீர் நிரம்பி வழிகிறது. இதனால் கரையம்பாடி செய்யாறு கடல் போல காட்சியளிக்கிறது.

11, 12ம் வகுப்பு துணைத் தேர்வுகள் கால அட்டவணை வெளியீடு..!!

11 மற்றும் 12ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கான கால அட்டவணைகளை தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. நடந்து முடிந்த பொதுத் தேர்வுகளில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு வரும் ஜூன் 19-ம் தேதி உடனடி சிறப்புத் துணைத் தேர்வு நடத்தப்படும்…

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் (08.05.2023) இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தின் போது பொது மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா.முருகேஷ் அவர்கள்…

கலசபாக்கம் அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 88% மாணவர்கள் தேர்ச்சி!

  கலசபாக்கம் அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்த ஆண்டு 2023 நடைபெற்ற 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 88% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வெழுதிய மாணவர்களின் எண்ணிக்கை: 120 தேர்ச்சி பெற்ற மாணவர்களின்…

கலசபாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 96.7% மாணவிகள் தேர்ச்சி!

கலசபாக்கம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்த ஆண்டு 2023 நடைபெற்ற 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 96.7% மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவிகள்: S.…

12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!

12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (08.05.2023) காலை 09.30 மணிக்கு வெளியாக இருந்த நிலையில் சற்று தாமதமாக வெளியிடப்பட்டது. www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, www.dge1.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்துக்…

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் வாங்கும் பொருட்களுக்கு பணம் செலுத்த க்யூஆர் கோடு முறை அறிமுகம்!

நியாயவிலைக் கடைகளில் பணம் செலுத்த, க்யூஆர் குறியீடு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 602 நியாயவிலைக் கடைகளில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் முதல் முறையாக 602 நியாய விலைக் கடைகளில் பொதுமக்கள் பொருள்களை பெற பணமில்லா பரிமாற்ற…

கலசபாக்கம் ஸ்ரீ திருமாமுடீஸ்வர திருக்கோவிலில் பிரம்மோற்சவ தீர்த்தவாரி!

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் விழாவில் நேற்று (05.05.2023) பத்தாம் நாள் காலை செய்யாற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது.

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் : Day 10

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் விழாவில் நேற்று (05.05.2023) பத்தாம் நாள் இரவு பஞ்சமூர்த்திகளான விநாயகர் மூஷிக வாகனத்திலும், முருகர் இந்திர விமானத்திலும், பெரிய நாயக்கர் ரிஷப வாகனத்திலும், அம்மன்…

கலைஞர் கருணாநிதி அரசு கலை கல்லூரியில் சேர விரும்பும் மாணவ மாணவியர்கள் இணையவழியில் விண்ணப்பிக்கலாம்!

திருவண்ணாமலையில் உள்ள கலைஞர் கருணாநிதி அரசு கலை கல்லூரியில் சேர விரும்பும் மாணவ மாணவியர்கள் இணையவழியில் விண்ணப்பிக்க மாணவர் சேர்க்கை உதவி மையம் கல்லூரி வளாகத்தில் 08.05.2023 முதல் 19.05.2023 வரை காலை 8:30…

கலசபாக்கத்தில் தற்போது இடி மின்னலுடன் கன மழை!

 கலசபாக்கத்தில் இன்று பிற்பகல் முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் தற்போது இடி மின்னலுடன் கன மழை பெய்து வருகின்றது. 

சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்!

நினைத்தாலே முக்தி தரும் திரு அண்ணாமலையார் திருக்கோவிலில் சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அருணாச்சலேஸ்வரரை தரிசித்து வருகின்றனர்.

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சித்திரை வசந்த உற்சவம் தீர்த்தவாரி!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் நிறைவு பெற்றதை முன்னிட்டு அய்யங்குளத்தில் அண்ணாமலையார் தீர்த்தவாரி நடைபெற்றது.

கலசபாக்கம் ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவ திருவீதி உலா!

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவ 10-ம் நாள் திருவிழாவையொட்டி சாமி திருவீதியுலா நடைபெற்றது. இதில் பக்தர்கள் சுவாமிக்கு தீபாராதனை காண்பித்து வழிபட்டனர்.

சித்ரா பௌர்ணமியையொட்டி தொடங்கிய கிரிவலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கடந்த 25ம் தேதி சித்திரை வசந்த உற்சவ விழா துவங்கியது. அதனை தொடர்ந்து சித்ரா பௌர்ணமியையொட்டி தொடங்கிய கிரிவலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.