Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருத்தேர் பிரமோற்சவ விழா!

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டம் கீழ்பாலூர் கிராமத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் திருத்தேர் பிரமோற்சவ விழா நிகழும் சுபகிருது வருடம் ஆடி மாதம் 17 ஆம் தேதி (02.08.2022) செவ்வாய்கிழமை காலை…

கணிப்பொறி பயிற்சி வகுப்பில் இந்த வாரம் நண்பர்கள் தினத்தை முன்னிட்டு கடிதம் மற்றும் படங்கள் வரைந்து வாழ்த்துக்களை பகிர்ந்தனர்!

நமது கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் கணினி பயிற்சி வகுப்பில் இந்த வாரம் நண்பர்கள் தினத்தை முன்னிட்டு கடிதம் மற்றும் படங்கள் வரைந்து வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். மேலும், அவர்களைப் பற்றிய சுவாரஸ்யமான நினைவுகளை பேசி…

கலசபாக்கம்.காம் சார்பாக நடைபெற்ற திறன் மற்றும் CREATIVITY & INNOVATION பற்றிய சிறப்பு பயிற்சி வகுப்புகள்!

கலசபாக்கம்.காம் சார்பாக நமது அலுவலகத்தில் இன்று திரு.கவி பிரசாந்த் அவர்களின் பேச்சு திறன் மற்றும் CREATIVITY & INNOVATION பற்றிய சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. இதில் நமது பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மற்றும்…

கலசபாக்கத்தில் ஆடி மாத இரண்டாம் வெள்ளியில் மாரியம்மன் திருவீதி உலா!

கலசபாக்கத்தில் ஆடி மாத இரண்டாம் வெள்ளியை முன்னிட்டு இன்று (29.07.2022) கலசபாக்கம் புதுப்பேட்டை மாரியம்மன் கோவில் அலங்கார திருவீதி உலா நடைபெற்று வருகின்றது.

பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று(28.7.2022) பள்ளி கல்வித்துறையின் சார்பில் தங்குமிடத்துடன் கூடிய அரசு, தனியார் பள்ளி மற்றும் உண்டு உறைவிட பள்ளியின் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு கருதி பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய…

திருவண்ணாமலையில் புதுப்பாளையம் பேரூராட்சியின் வளர்ச்சி திட்டப்பணிகளை குறித்து ஆய்வுக் கூட்டம்!

திருவண்ணாமலை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலக கூட்டரங்கில் புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து வளர்ச்சி திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வுக் கூட்டம் நேற்று…

கலசபாக்கம் செய்யாற்றில் சிறிய அளவில் வெள்ள நீர் குழந்தைகள் மகிழ்ச்சி!

செங்கம் மற்றும் கலசபாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் ஓரிரு நாட்களாக பெய்த கன மழையால் கலசபாக்கம் செய்யாற்றில் சிறிய அளவில் வெள்ள நீர் செல்கிறது. இதில் குழந்தைகள் மகிழ்ச்சியாக விளையாடி, மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர்.

கலசபாக்கம்.காம் வழங்கும் சிறப்பு பயிற்சி வகுப்புகள்!

இலவச பயிற்சி வகுப்புகள் உங்களின் பேச்சு திறன் மற்றும் CREATIVITY & INNOVATION பற்றிய சிறப்பு பயிற்சி வகுப்பு கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் சனிக்கிழமை(30.07.2022) காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை…

அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆடிப்பூரம் ஐந்தாம் நாள் உற்சவம்!

திருவண்ணாமலையில் அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் நேற்று (27.07.2022) ஆடி பூரம் உற்சவம் ஐந்தாம் நாள் காலை ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ பராசக்தி அம்மன் மாடவீதி உலா நடைபெற்றது.

இனி 17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்!

இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே தேர்தலில் ஓட்டளிக்க முடியும் என்பது நடைமுறை. இதற்காக 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் மட்டுமே வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்க்க கோரி இந்திய தேர்தல் கமிஷனிடம்…

திருவண்ணாமலை மாவட்டம் மாலையிட்டான் குப்பம் கிராமத்தில் பனை விதை நடும் திருவிழா!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டத்தில் உள்ள மாலையிட்டான் குப்பம் கிராமத்தில் வரும் ஞாயிற்று கிழமை(31.07.2022) காலை 8 மணியளவில் பனை விதை நடும் திருவிழா நடைபெற உள்ளது. இதில் மாலையிட்டான் குப்பம் கிராமத்தில் உள்ள…

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஆடி மாத அமாவாசை பிரதோஷம்!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (26.07.2022) ஆடி மாத அமாவாசை பிரதோஷம் முன்னிட்டு நந்தி பகவானுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.

அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆடிப்பூரம் மூன்றாம் நாள் உற்சவம்!

திருவண்ணாமலையில் அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் நேற்று (25.07.2022) ஆடி பூரம் உற்சவம் மூன்றாம் நாள் இரவு ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ பராசக்தி அம்மன் அலங்காரம் மாடவீதி உலா நடைபெற்றது.

கலசப்பாக்கம் பகுதியில் மழையின் காரணமாக மின்நிறுத்தம் ரத்து!

கலசப்பாக்கம் பகுதியில் இன்று (26.07.2022) மின்நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது. மழையின் காரணமாக அறிவிக்கப்பட்டிருந்த மின்நிறுத்தம் ரத்து செய்யப்படுகிறது.

கலசப்பாக்கத்தில் போத்தராஜா கும்பம் திருவிழா!

கலசப்பாக்கத்தில்  உள்ள திரௌபதியம்மன் (போத்த ராஜா) கும்பம் ஆடித்திங்கள்  நேற்று (25.07.2022) மதியம் 2 மணி அளவில் திரௌபதியம்மன் ஊர்வலமும் இரவு 7 மணியளவில் போத்தராஜா கும்பமும் நடைபெற்றது.

கலசபாக்கம் பகுதியில் மின் நிறுத்தம்!

மாதாந்திர சிறப்பு பராமரிப்பு காரணமாக நாளை (26.07.2022) செவ்வாய்க்கிழமை புதுப்பாளையம்,கீழ்குப்பம், மேல்குப்பம்,பனைஒலைபாடி, படிஅக்ரகாரம்,நாகப்பாடி, வீரானந்தல், மேலபுஞ்சை,வாசுதேவன்பட்டு, தேவனந்தல், உண்ணாமலைபாளையம், பெரிய ஏரி, புதூர் செங்கம்,முன்னூர்மங்கலம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை…

குழந்தைகளுக்காக இந்த வாரம் செஸ் விளையாட்டு பயிற்சி!

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் கணிப்பொறி பயிற்சி வகுப்பில் குழந்தைகளுக்காக, இந்த வாரம் உலக செஸ் தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கு கணினியின் மூலமாக செஸ் விளையாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆடிப்பூரம் முதல் நாள் உற்சவம்!

அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் நேற்று (23.07.2022) ஆடிகிருத்திகை முன்னிட்டு பழனியாண்டவர் சிறப்பு அலங்காரம் மற்றும் ஆடிப்பூரம் உற்சவம் முதல் நாள் இரவு பராசக்தி அம்மன் மாடவீதி உலா நடைபெற்றது.