Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை (27.02.2024) வருங்கால வைப்பு நிதி குறை தீர்வு கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட வருங்கால வைப்பு நிதி குறை தீர்வு கூட்டம் நாளை (27.02.2024) காலை 9 மணி முதல் மாலை 5.45 மணி வரை திருவண்ணாமலை வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளியில் நடைபெறுகிறது.

திருவண்ணாமலையில் பள்ளி மேலாண்மை குழு தலைவர்கள் மாநாட்டில் கலசபாக்கம் அடுத்த கோயில் மாதிமங்கலம் பள்ளியை மாவட்ட ஆட்சியர் பாராட்டு!

திருவண்ணாமலையில் நடைபெற்ற பள்ளி மேலாண்மை குழு தலைவர்கள் மாநாட்டில் கலசபாக்கம் ஒன்றியம் கோயில் மாதிமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மேலாண்மை குழு சிறப்பாக செயல்பட்டதற்காக மாவட்ட ஆட்சித் தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் அவர்கள், மேலாண்மை…

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் நேற்று (22.02.2024) மாசி மாதம் வளர்பிறை சதுர்த்தசி திதி!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் நேற்று (22.02.2024) மாசி மாதம் வளர்பிறை சதுர்த்தசி திதியில் சிவகாமி அம்மாள் சமேத நடராஜர் பெருமாள் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு…

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள தனித் தேர்வர்கள் நாளை தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை இணையதளத்தில் பெறலாம்!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள தனித் தேர்வர்கள் நாளை (பிப்ரவரி 24) முதல் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 10 – ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு இன்று (23.02.2024) தொடங்கியது!

தமிழகத்தில் 10 – ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு இன்று (23.02.2024) தொடங்கி பிப்ரவரி 29 – ஆம் தேதி வரை செய்முறைத் தேர்வு நடைபெறுகிறது. 10 – ஆம் வகுப்பு பொதுத்தேர்வு…

திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு கிளாம்பாக்கத்திலிருந்து 30 ஏசி பஸ்கள் இயக்கம்!

திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் நடைபெறுவதை ஒட்டி கிளாம்பாக்கத்தில் இருந்து நாளையும் (23.02.2024) வெள்ளிக்கிழமை, நாளை மறுநாளும் (24.02.2024) சனிக்கிழமை திருவண்ணாமலைக்கு 30 ஏசி பஸ்கள் இயக்க ஏற்பாடு. www.tnstc.in மற்றும் மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்து…

கரும்புக்கான கொள்முதல் விலை அக்டோபர் மாதம் முதல் உயர்வு!

கரும்பு கொள்முதல் விலை அக்டோபர் மாதம் முதல் குவிண்டாலுக்கு ரூ.315-லிருந்து ரூ.340 ஆக உயர்த்தப்படவுள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மாசி மாத பௌர்ணமி பிரதோஷம்!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் புதன்கிழமை (21.02.2024) மாசி மாத பௌர்ணமி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் தங்க ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர் பவனி நடைபெற்றது. இதில் திரளான…

அமைப்பு சாரா தொழிலாளர்கள் நிதி உதவி கோரியுள்ள மனுக்களை சிறப்பு உதவி மையத்தில் நேரில் சமர்ப்பிக்கலாம்!

அமைப்புசாரா தொழிலாளர்கள் நிதி உதவி கோரி 02-12-2023 தேதிக்கு முன் விண்ணப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்களை அதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு உதவி மையத்தில் நேரில் சமர்ப்பிக்கலாம். 18 வயது முதல் 60 வயதிற்கு உட்பட்ட…

தமிழகம் முழுவதும் மார்ச் 3- ந் தேதி போலியோ சொட்டு மருந்து!

தமிழகம் முழுவதும் மார்ச் 3- ந் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படும் என சுகாதாரத் துறை அறிவிப்பு.  43,000 இடங்களில் 57 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க திட்டம்.

2023-2024 கல்வியாண்டில் கலசபாக்கம் வட்டாரத்தில் சிறந்த பள்ளி மேலாண்மை குழு செயல்பாடு விருது!

2023-2024 கல்வி ஆண்டில் கலசபாக்கம் வட்டாரம் சிறந்த பள்ளி மேலாண்மை குழு செயல்பாடு விருது கலசபாக்கம் அரசு மாதிரி ஆண்கள் மேல் நிலைப் பள்ளி பெற்றுள்ளது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு. தெ.பாஸ்கர பாண்டியன்…

திருவண்ணாமலையில் நடைபெற்ற பல்வேறு தனித் திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு!

திருவண்ணாமலையில் இயங்கி வரும் கான்செப்ட் லோனிங் நிறுவனத்தின் சார்பில் அபாகஸ், வேதிக் மேக்ஸ் மற்றும் சிறப்பு கையெழுத்து போன்ற பல்வேறு தனித் திறன் போட்டிகளில் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 650 மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.இப்போட்டிகளில்…