Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் ஆற்று திருவிழா 2024: தீர்த்தவாரி!

கலசபாக்கம் செய்யாற்றில் ஆண்டுதோறும் நடைபெறும் பழமை வாய்ந்த ஸ்ரீ அபிதா குஜாம்பாள் சமேத ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் மற்றும் அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை திருமாமுடீஸ்வரர் சாமிகளுடன் அண்ணாமலையார் தீர்த்தவாரி நிகழ்வு இன்று(16.02.2024) சப்தமி (ரதசப்தமி )…

கலசபாக்கம் அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்தவாரிக்கு புறப்பாடு!

கலசபாக்கம் அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் கோவிலில் இருந்து ரத சப்தமியில் செய்யாற்றின் தீர்த்தவாரி இன்று (16.02.2024) உற்சவத்திற்கு சுவாமி புறப்பாடு.

கலசபாக்கம் ஆற்று திருவிழாவை முன்னிட்டு கோவிலில் பிரபை செய்யும் பணி!

கலசபாக்கம் ஆற்று திருவிழாவை முன்னிட்டு கோவிலில் பிரபை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

திருவண்ணாமலை விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் (29.02.2024) அன்று மாற்றம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை (16.02.2024) தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நிர்வாக காரணங்களால் வரும் (29.02.2024) தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

சிபிஎஸ்இ 10, +2 தேர்வுகள் இன்று (15.02.2024) தொடக்கம்!

சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் இன்று தொடங்குகின்றன. தேர்வை இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து 39 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் எழுதுகின்றனர். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், காலை 10…

திருவண்ணமலை மாவட்டத்தில் உள்ள தபால் நிலையங்களில் நேற்று முதல் தங்க பத்திரம் விற்பனை துவக்கம்!

திருவண்ணமலை மாவட்டத்தில் உள்ள தபால் நிலையங்களில் நேற்று (12.02.2024) தேதி முதல் (16.02.2024) தேதி வரை தங்க பத்திரம் விற்பனை துவங்கியுள்ளது. முதலீடு தொகைக்கு ஆண்டிற்கு 2.5% யும், 8 ஆவது ஆண்டின் முடிவில்…

திருவண்ணாமலையில் பிப்.17 அன்று மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதை முன்னிட்டு விழிப்புணர்வு!

திருவண்ணாமலையில் வருகின்ற 17.02.2024 அன்று கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதை முன்னிட்டு நேற்று (12.07.2024) பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் திரு.…

பிளஸ் 1,பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு நேற்று முதல் தொடக்கம்!

+1, +2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு அட்டவணைப்படி +2 மாணவர்களுக்கு பிப்ரவரி 12ஆம் தேதி முதல் செய்முறை தேர்வு நடைபெற்று வருகிறது. +1 மாணவர்களுக்கு பிப்ரவரி 19ம் தேதி முதல் பிப்ரவரி 24ஆம் தேதி…

மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று (13.02.2024) திறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாசி மாத பூஜைகள் நாளை (14ம் தேதி) முதல் தொடங்குகின்றன. இதை முன்னிட்டு இன்று மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது.

திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் ரத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் (15.02.2024) தேதி முதல் (17.02.2024) தேதி வரை இலவச தரிசன டோக்கன்கள் ரத்து செய்யப்படுகிறது. ரத சப்தமி விழாவை முன்னிட்டு 3 நாட்களுக்கு சர்வதர்ஷன் டைம் ஸ்லாட் டோக்கன்கள்…

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு இன்று தொடக்கம்!

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு இன்று முதல் வரும் பிப்ரவரி 17-ம் தேதி வரை நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் சுமார் 6 லட்சம் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.

டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!

2024 – 25ம் கல்வியாண்டில் MBA, MCA படிப்பில் சேர்வதற்கான டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். மார்ச் 9ம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. https://tancet.annauniv.edu/tancet என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

பிப்.14 முதல் இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்!

இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.trb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். பிப்.14 முதல் மார்ச் 15 வரை தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் செய்து கொள்ளலாம்.

மாசி மாத பூஜைக்காக வரும் பிப்.13ல் சபரிமலை நடை திறப்பு!

மாசி மாத பூஜைக்காக வரும் 13-ந் தேதி சபரிமலை நடை திறக்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக கேரள அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.