Web Analytics Made Easy -
StatCounter

தனுஷ்கோடியில் விரைவில் ஹெலிகாப்டர் இறங்குதளம்!

தமிழகத்தின் ஆன்மிக மற்றும் சுற்றுலாத் தலங்களை இணைக்கும் வகையில், தனுஷ்கோடியில் விரைவில் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்கப்பட உள்ளதாக சுற்றுலாத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

சமையல் சிலிண்டர் விலை மேலும் ரூ.100 குறைப்பு!

உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு சமையல் சிலிண்டர் விலை மேலும் ரூ.100 குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே உஜ்வாலா திட்ட சமையல் சிலிண்டர் விலை ரூ. 200 குறைக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் ரூ.100 குறைக்கப்பட்டுள்ளது. மேலும்,…

நமது கலசபாக்கத்தில் நாளை மாதாந்திர விவசாயிகள் கலந்துரையாடல்!

    நமது கலசபாக்கத்தில் மாதாந்திர விவசாயிகள் கலந்துரையாடல் “விவசாயிகளை சூழும் நெருக்கடிகளும், அவற்றை களைவதும்” என்ற தலைப்பில் நாளை (05.10.2023) நடைபெறவுள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக “Raattai The Wheel வழியாக” அனைவர்க்குமாக…

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் நட்சத்திர திருக்கோயிலில் புரட்டாசி மாத கிருத்திகை!

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் புரட்டாசி மாத கிருத்திகை திருநாளான இன்று( 03.10.2023 ) திரளான பக்தர்கள் கலந்து கொண்டு…

திருப்பதி கோவிலில் சந்திர கிரகணம் முன்னிட்டு வருகின்ற அக்டோபர் 28ஆம் தேதி நடை மூடப்பட்டிருக்கும்!

சந்திர கிரகணம் வருகின்ற அக்டோபர் 28ஆம் தேதி நடைபெற இருப்பதால் இரவு 7:05 மணி முதல் மறுநாள் அதிகாலை 3.15 மணி வரை திருப்பதி கோவில் நடை மூடப்பட்டு இருக்கும் என திருப்பதி தேவஸ்தானம்…

இன்று திருவண்ணாமலை மாவட்டத்தின் 34 வது பிறந்த நாள்!

நமது திருவண்ணாமலை மாவட்டத்தின் 34 வது பிறந்த நாள். 1989 ஆம் ஆண்டு இதே நாளில் வட ஆற்காடு மாவட்டம் இரண்டாக பிரிந்து அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் அவர்களால் திருவண்ணாமலை சம்புவராயர் என…

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் சிறப்பு பயிற்சி வகுப்புகள்!

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் சனிக்கிழமை(30.09.2023) பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரை Abacus,Handwriting,Calligraphy, Vedic maths போன்ற பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றது. வழங்குபவர்: Concept Learning – திருவண்ணாமலை ஆர்வமுள்ள குழந்தைகள் மற்றும்…

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் புரட்டாசி மாத பௌர்ணமி நடராஜர் அலங்காரம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு நேற்று (28.09.2023) நடராஜரும் சிவகாமி அம்பாளும் சிறப்பு அலங்காரத்தில் காட்சி.

ரூ.2000 நோட்டுகளை மாற்ற நாளை கடைசிநாள்!

ரிசர்வ் வங்கியின் உத்தரவுப்படி ரூ.2,000 நோட்டுகளை பொதுமக்கள் மாற்றுவதற்கான கால அவகாசம் நாளை (செப்டம்பர் 30) முடிவடைகிறது.

புரட்டாசி மாத கிரிவலத்தை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கம்!

புரட்டாசி மாத பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, சென்னை கடற்கரையிலிருந்து இன்று மாலை 6:00 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் இரவு 9:50 மணிக்கு வேலூர் கண்டோண்மென்ட் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு நள்ளிரவு 12:05 மணிக்கு…

தமிழ்நாட்டில் இன்று 12 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அண்ணாமலையார் திருக்கோவிலில் பௌர்ணமியை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவில் உதவியாளர்கள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!

ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள உதவியாளர்கள் பணியிடங்களுக்கு முன்னாள் படை வீரர்கள் வரும் அக்டோபர் மாதம் 4 – ஆம் தேதிக்குள் www.rbi.org.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆவின் நிறுவனத்தில் ‘ஐஸ்கிரீம், குல்பி’ விநியோகம் செய்ய மொத்த விற்பனையாளர்கள் விண்ணப்பிக்கலாம்!

திருவண்ணாமலை ஆவின் நிறுவனத்தில் ‘ஐஸ்கிரீம், குல்பி’ விநியோகம் செய்ய மொத்த விற்பனையாளர்கள் அக்டோபர்  10 – ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் திரு பா.முருகேஷ் அறிவித்துள்ளார்.

அக்- 27 இல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு!

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அக்.27-ம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார். இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, ஆண்டுதோறும் செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள்…