Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் அரசு ஆண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ரூபாய் 32 ஆயிரம் மதிப்பீட்டில் புதியதாக மின் இணைப்பு!

அரசு ஆண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மை குழு மற்றும் முன்னாள் மாணவர்கள் சேர்ந்து ரூபாய் 32 ஆயிரம் மதிப்பீட்டில் நான்கு வகுப்பறைகள் கொண்ட கட்டிடத்திற்கு புதியதாக மின்…

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் ஆவணி மாத பௌர்ணமி பிரதோஷம்!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (08.09.2022) ஆவணி மாத பௌர்ணமி பிரதோஷம் முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.

கலசபாக்கம் அடுத்த விண்ணுவாம்பட்டு கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் ஆலயத்தில் மஹாகும்பாபிஷேக பெருவிழா!

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டம் விண்ணுவாம்பட்டு கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் ஆலயத்தில் ஆவணி மாதம் 29 ஆம் நாள் 14. 9 .2022 புதன்கிழமை காலை 9.00 மணிக்கு மேல் 10:30…

பள்ளிகளில் வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவு செய்யும் நடைமுறை நிறுத்தம்!

10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களை மாணவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவு செய்யும் நடைமுறை நிறுத்தம். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ அல்லது tnvelaivaaippu.gov.in என்ற இணையத்தளம் வாயிலாகவோ பதிவு செய்ய…

திருவண்ணாமலையில் ஆவணி மாத கிரிவலம் செல்ல உகந்த நேரம்!

திருவண்ணாமலை ஆவணி மாத கிரிவலம் செல்வதற்கு உகந்த நேரம் நாளை (9.9.2022) மாலை 6:22 மணி முதல் 10.9.2022 ஆம் நாள் மாலை 4:35 மணி வரை என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. உங்கள்…

அரசு கல்லூரிகளில் முதுகலை படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புகளில் சேர இன்று (07.09.2022) முதல் www.tngasapg.in என்ற இணையதள வாயிலாக விண்ணப்பிக்கலாம். தரவரிசைப்பட்டியல் 20ம் தேதி வெளியிடப்பட்டு மாணவர் சேர்க்கை 21ம் தேதி தொடங்கும்…

கலசபாக்கம் – செய்யாற்றில் நீர் வரத்து அதிகரித்துக் கொண்டிருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கிராம நிர்வாக அலுவலர் வேண்டுகோள்!

கலசபாக்கம் – செய்யாற்றில், தொடர் மழையினால் நீர்வரத்து அதிகரித்துக் கொண்டே உள்ளது. பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ இறங்க வேண்டாம். குழந்தைகளை ஆற்றுக்கு செல்ல அனுமதிக்க வேண்டாம் என்பதை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.…

கலசபாக்கம் செய்யாற்றில் மீண்டும் வெள்ளப் பெருக்கு… விவசாயிகள் மகிழ்ச்சி!!!

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் கலசபாக்கம் செய்யாற்றில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கலசபாக்கம் சுற்றியுள்ள பகுதிகளில் பல ஏரிகளில் உபரிநீர் வெளியேறி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.…

தொடர் மழையின் காரணமாக குப்பநத்தம் அணை மற்றும் மிருகண்டா அணையிலிருந்து நீர் திறப்பு!

தொடர் மழையின் காரணமாக குப்பநத்தம் அணை மற்றும் மிருகண்டா அணையிலிருந்து 320 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் கலசபாக்கம் செய்யாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கலசபாக்கம் சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ஆதமங்கலம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களான ஆதமங்கலம் புதூர், சிறுவள்ளூர், கெங்கவரம்,கிடாம்பாளையம், மேல்சோழங்குப்பம், வீரளூர், சோழவரம், கேட்டவரம்பாளையம், பள்ளகொல்லை…

கலசபாக்கம் பீடரில் பராமரிப்பு பணி இருப்பதால் சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

போளூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கலசபாக்கம் பீடரில் பராமரிப்பு பணிக்காக மேற்கொள்ள இருப்பதால் நாளை (06.09.2022) செவ்வாய்க்கிழமை கரையாம்பாடி, ஆனைவாடி, சாலையனூர், பத்தியவாடி, காலூர்,அணியாலை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி…

கலசபாக்கம் பகுதியில் நேற்று செய்யாற்றங்கரையில் விநாயகர் சிலை கரைக்கப்பட்டது!

கலசபாக்கம் பகுதியில் விநாயக சதுர்த்தியன்று விநாயகர் சிலை வைத்து வழிபட்ட நிலையில் ஐந்து நாட்களுக்கு பிறகு நேற்று (04.09.2022) செய்யாற்றங்கரை மற்றும் குளக்கரைகளில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது.

குழந்தைகளுக்காக இந்த வாரம் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களுக்கு கடிதம் வரைதலுக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டது!

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் கணிப்பொறி பயிற்சி வகுப்பில் இந்த வாரம் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அவர்களின் விருப்பமான ஆசிரியர்களுக்கு கடிதம் வரைந்து அதை வாசித்து காட்டினார்.

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் செய்தி சேகரிப்பதில் ஆர்வமுள்ள நபர்கள் தேவை!

உங்கள் பகுதியில் இருந்து தினசரி செய்திகள் தகவல்கள் மற்றும் கோயில்களை பற்றிய சிறப்புகளை WhatsApp வாயிலாக டைப் செய்து செய்து சேகரிப்பதில் ஆர்வம் உள்ள நபர்கள் தேவை செல்போனிலேயே புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தால்…

திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகளுக்கான தொழில் முனைவோர் பயிற்சி!

திருவண்ணாமலை மாவட்ட வேளாண் உழவா் நலத்துறையின் கீழ் செயல்படும் உழவா் பயிற்சி நிலையம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் இணைந்து ஊரக இளைஞா்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி 2022-23 ஆம் ஆண்டில் நடத்த உள்ளது.…

திருவண்ணாமலை மாவட்டத்தில் 27 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடப்பு சொர்ணவாரி பருவத்தில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் கீழ்பென்னாத்தூர் தாலுகாவில் கரிக்கலாம்பாடி, செங்கம் தாலுகாவில் மேல்செங்கம் ஆகிய இடங்களுக்கு மாற்றாக ஆரணி தாலுகாவில் குன்னத்தூர் மற்றும் செங்கம்…

கலசபாக்கம் பகுதியில் பரவலாக மழை!

கலசபாக்கம் பகுதியில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடனும் லேசான மழையுடனும் காணப்பட்ட நிலையில், பிற்பகல் 12 மணிக்கு பிறகு வானிலை மாற துவங்கி, தற்போது வரை பரவலாக தொடர் மழை பெய்து வருகின்றது.