Web Analytics Made Easy -
StatCounter

ஆடி அமாவாசை 2025: தர்ப்பணம் செய்ய ஏற்ற நேரம்!

ஆடி அமாவாசை இன்று (ஜூலை 24) முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய இது மிக முக்கியமான நாள். அமாவாசை திதி இன்று அதிகாலை 3.06 மணிக்கு துவங்கி, நாளை (ஜூலை 25) அதிகாலை 1.48 மணி…

QR குறியீடு கொண்ட அடையாள அட்டை கட்டாயம்!!

ரயில்வே உணவுப் பணியாளர்கள் இனிமேல் QR குறியீடு கொண்ட அடையாள அட்டை கட்டாயம். அடையாள அட்டை இல்லாதவர்கள் உணவுப் பொருட்கள் விற்க அனுமதி இல்லை. தரமான உணவு வழங்க முக்கிய முடிவு.    

திருவண்ணாமலையில் இலவச நான்கு சக்கர வாகன ஓட்டுநர் தொழிற்பயிற்சி!!

திருவண்ணாமலை மாவட்டத்தில், இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் (RSETI) சார்பில், இலவச நான்கு  சக்கர வாகன ஓட்டுநர் பயிற்சி (30 நாட்கள்) வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பயிற்சி பெற விருப்பம் உள்ளவர்கள் மேற்கண்ட முகவரியில் நேரில்…

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஆடி மாத அமாவாசை பிரதோஷம்!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (22-07-2025)  ஆடி மாத அமாவாசை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் தரிசனம் செய்தார்கள். 

கீ ஆன்ஸர் வெளியீடு!

குரூப் 4 தேர்வுக்கான கீ ஆன்ஸரை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. டிஎன்பிசி -யின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளன. இதில் ஆட்சேபனை தெரிவிக்க விரும்பும் தேர்வர்கள் உரிய ஆவணங்களுடன் வரும் 28ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

கலசபாக்கம் அடுத்த சில பகுதிகளில் அத்தியாவசிய பணியின் காரணமாக இன்று (22.07.2025) மின் நிறுத்தம்!

காப்பலூர் – வன்னியனூர் இடையே உள்ள மின்மாற்றி மற்றும் மின்கம்பியில் ஏற்பட்ட தடை காரணமாக, மின்சார ஊழியர்கள் பழுது சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கலசபாக்கம் பகுதியில் மின்தடை ஏற்பட்டுள்ளது என கலசபாக்கம்…

மின் கட்டணம் உயர்வு!

ஜூலை 1-ம் தேதிக்கு முன்பு பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு பழைய சேவை கட்டணமும், 1-ம் தேதிக்கு பிறகு பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு உயர்த்தப்பட்ட மின்வாரிய சேவை கட்டணமும் வசூலிக்கப்படும் -மின்வாரியம் உத்தரவு.    

கலசபாக்கம் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை மின்தடை!!

கலசபாக்கம் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை (22.07.2025) செவ்வாய்கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை கரையாம்பாடி, ஆனைவாடி, சாலையனூர், பத்தியவாடி, காலூர், அணியாலை ஆகிய கிராமங்களுக்கும் மின்…

ஆடி மாத பொங்கல் விழா!

கலசபாக்கம் ஏரிக்கரையில் அமைந்துள்ள காளியம்மன் கோவிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு வரும் (21.07.2025) திங்கட்கிழமை ஏரிக்கரை காளியம்மன் கோவிலில் பொங்கல் வைத்தல் நடைபெற உள்ளது.

ஆடிக்கிருத்திகை விழா!

கலசபாக்கம் அடுத்த எலத்தூர்-மோட்டூர் அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி கோயிலில்(நட்சத்திரக்கோயில்), ஆடிக்கிருத்திகை விழா 16.08.2025 அன்று சிறப்பாக நடைபெறும். (20.07.2025) அன்று கிருத்திகை தினத்தில் விழா நடைபெறாது என திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கலசபாக்கத்தில் புதிதாக மின் உதவி பொறியாளர் நியமனம்!

கலசபாக்கத்தில் புதிதாக மின் அலுவலக உதவி பொறியாளர் திரு M. விஜயகுமார் (07.07.2025) அன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

கலசபாக்கம் புதுப்பேட்டை மாரியம்மன் முதல் ஆடி முன்னிட்டு வீதி உலா!

கலசபாக்கம் புதுப்பேட்டை மாரியம்மன் கோவிலில், இன்று (18.07.2025) ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மாரியம்மன் திருவீதி உலா நடைபெற்று வருகின்றது.