Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் இந்த வார வகுப்பில் கணினி பாகங்களை பற்றி பயிற்சி!

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் கணினி பயிற்சி வகுப்பில் 25.01.2025 அன்று கணினி சார்ந்த தகவல்கள் மற்றும் உபயோகப்படுத்தும் பொருட்கள் பற்றியும் மாணவர்கள் கற்றுக்கொண்டனர்.  

கலசபாக்கம் நடுவர் நீதிமன்றத்தில் 76வது குடியரசு தினக் கொண்டாட்டம்!

கலசபாக்கம், மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று (26.01.2025) 76-வது குடியரசு தின விழாவை திருமதி.ச.பூர்ணிமா, கலசபாக்கம், மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் அவர்கள் கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார். இவ்விழாவில்…

கலசபாக்கம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் குடியரசு தினக் கொண்டாட்டம்!

கலசபாக்கத்தில் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் அலுவலகத்தில் நேற்று (26.01.2025) குடியரசு தினத்தை முன்னிட்டு கொடியேற்றும் விழா நடைபெற்றது.

நாயுடுமங்கலம் துணை மின்நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் இன்று (25.01.2025) மின் நிறுத்தம்!

நாயுடுமங்கலம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக பில்லூர், பழங்கோவில், தென்பள்ளிப்பட்டு, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் இன்று (25.01.2025) சனிக்கிழமை காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணிவரை (மாற்றத்துக்கு உட்பட்டது) மின்…

கலசபாக்கத்தில் 15-வது தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி!

கலசபாக்கத்தில் 15-வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு அரசு பள்ளி மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு பேரணி, கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகம் திருமதி.ராஜேஸ்வரி அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  உடன் அரசு அலுவலர்கள் மற்றும் அரசு…

பட்டு நெசவாளர்களுக்கு மானிய விலையில் உபகரணங்கள் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

பட்டு நெசவாளர்களுக்கு மானிய விலையில் கைத்தறி உபகரணங்கள் சில்க் சமாக்ரா-2 திட்டத்தின் கீழ் பட்டு கைத்தறி நெசவாளர்கள் மானிய விலையில் தறி உபகரணங்கள் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் திரு.பாஸ்கர பாண்டியன் தகவல் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் விரிவாக்கம்!

ஆரம்ப சுகாதார நிலையங்கள் விரிவாக்கம் நாடு முழுவதும் உள்ள 12,348 ஆரம்ப சுகாதார நிலையங்களை 24 மணி நேர மருத்துவ மனைகளாக மாற்ற முடிவு. குக்கிராமங்களுக்கும் அத்தியாவசிய மருத்துவ சேவைகள் உடனடியாகக் கிடைக்க மத்திய…

கலசபாக்கம் ஊராட்சியில் குடியரசு தின கிராம சபை கூட்டம்!

கலசபாக்கம் ஊராட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு (26.01.2025) ஞாயிற்றுக்கிழமை காலை 11:00 மணியளவில் கிராம சபை கூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளதால் அனைத்து பகுதிகளில் உள்ள பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு…

நாயுடுமங்கலம் துணைமின் நிலையத்தில் நாளை (25.01.2025) மின் நிறுத்தம்!

நாயுடுமங்கலம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக கலசபாக்கம், அண்ணா நகர், BDO ஆபிஸ், பில்லூர், பழங்கோவில், தென்பள்ளிப்பட்டு, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை (25.01.2025) சனிக்கிழமை காலை 09:00 மணி முதல் மாலை 05:00…

பெற்றோர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!

தமிழகம் முழுவதும் கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்களின் பெற்றோர்களை குறி வைத்து Phone pay, gpay யில் உதவித் தொகை அனுப்புவோம் எனக் கூறி செல்போனில் அழைப்பு விடுத்து மோசடி. போலி அழைப்புகளை நம்பவேண்டாம்…

தேர்தல் பணியில் சிறப்பாக செயல்பட்ட 3 கலெக்டர்களுக்கு விருது!

3 கலெக்டர்களுக்கு விருது தேர்தல் மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் சிறப்பாக செயல்பட்டதற்காக திருவண்ணாமலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, கோவை கலெக்டர் கிராந்தி குமார் ஆகியோருக்கு விருது தேசிய…

கலசபாக்கத்தின் பெருமை – உலக சாதனை படைத்த புருசோதமன் & இசையில் சிறந்த தனுமிதா!

கலசபாக்கத்தைச் சேர்ந்த விஜயகாந்தின் மகன் புருசோதமன், வில்வித்தைப் போட்டியில் 12 நிமிடங்களில் 144 அம்புகளை எய்து உலக சாதனை விருதைப் பெற்றுள்ளார்.இவருடைய அக்கா தனுமிதா, தற்போது விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிறப்பாக…

கலசபாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத் திறனாளிகள் மருத்துவ முகாம்!

கலசபாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று (23.01.2025) கலசபாக்கம் வட்டார அளவில் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான உள் அடங்கிய கல்வி 2025-2026 ஆண்டிற்கான மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாம் மாற்றுத் திறனாளி…

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!!

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 24-ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது. இதில் 8,10,12-ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ, பொறியியல்…

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட 979 குடிமைப் பணிகளுக்கான தேர்வு அறிவிப்பு!!

IAS, IFS, IPS உள்ளிட்ட 23 பதவிகளுக்கு ஜனவரி 22 முதல் பிப்ரவரி 11 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்; 979 குடிமைப் பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு மே 25ஆம் தேதி நடைபெறவுள்ளது. -யுபிஎஸ்சி    

கலசபாக்கம் – வில்வாரணி சாலை பணி: போக்குவரத்து மாற்றம்!

கலசபாக்கத்திலிருந்து வில்வாரணி செல்லும் சாலையில் புதியதாக சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், இந்த சாலையில் போக்குவரத்து தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இடம்: பிராயம்பட்டு

திருவண்ணாமலை மாவட்டத்தில் குடியரசு தின முன்னேற்பாடு ஆய்வுக்கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. தெ.பாஸ்கர பாண்டியன், இஆப., அவர்கள் தலைமையில் இன்று (22.01.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் குடியரசு தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் அரசு துறைச்சார்ந்த அலுவலர்களுடன்…

வரலாறு காணாத விலை உயர்வு..!!

இன்று (ஜனவரி 22) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.7525.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.7450.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 75 ரூபாய் உயர்ந்துள்ளது.…

வானியல் அதிசயம் இன்று முதல் 4 நாட்களுக்கு 6 கோள்கள் ஒரே நேர்கோட்டில்!

6 கோள்கள் ஒரே நேர்கோட்டில் அணி வகுக்கும் வானியல் நிகழ்வை இன்று முதல் 4 நாட்கள் கண்டு ரசிக்க, சென்னை பிர்லா கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சனி, வியாழன், வெள்ளி, செவ்வாய் கோள்களை…