Web Analytics Made Easy -
StatCounter

கீழ்பாலூர் கிராமத்தில் நாளை (15.08.2024) திருத்தேர் பிரம்மோற்சவ விழா!!

கலசபாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் நாளை (15.08.2024) திருத்தேர் பிரம்மோற்சவ விழா நடைபெறுகின்றது.

ஆதமங்கலம் பகுதிகளில் மின் நிறுத்தம்!

கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (14.08.2024) புதன்கிழமை காலை 08:00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை ஆதமங்கலம் புதூர், சிறுவள்ளூர், கெங்கவரம், கிடாம்பாளையம்,மேல்சோழங்குப்பம், வீரளூர்,…

திருப்பதிக்கு பைக்கில் செல்ல கட்டுப்பாடு!

விலங்குகளின் இனப்பெருக்க காலம் என்பதால், திருப்பதி மலைப்பாதையில் இன்று முதல் செப்.,30 வரை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி: தேவஸ்தானம்

4 புதிய மாநகராட்சிகள்-தொடங்கி வைக்கிறார் முதல்வர்!

4 புதிய மாநகராட்சிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். திருவண்ணாமலை, புதுக்கோட்டை, நாமக்கல், காரைக்குடி மாநகராட்சிகள் இன்று தொடங்கப்பட  உள்ளது.

கலசபாக்கம் செய்யாற்றில் வெள்ளம்!

ஜவ்வாது மலை பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழையால் குப்பநத்தம் அணை மற்றும் மிருகண்டா அணையில் நீர் வரத்து அதிகரித்து வருவதால் அணையில் இருந்து உபரி நீர் ஆனது திறக்கப்பட்டது.இதனால் கலசபாக்கம் செய்யாற்றில்…

நமது கலசபாக்கத்தை சார்ந்த திரு. M. சுப்பிரமணி நைனார் (ஓதுவார்) இறைவனடி சேர்ந்தார்!

நமது கலசபாக்கத்தை சார்ந்த திரு. M. சுப்பிரமணி நைனார் (ஓதுவார்)அவர்கள் சனிக்கிழமை (10.08.2024) இறைவனடி சேர்ந்தார்.அன்னாரது மறைவுக்கு கலசபாக்கம்.காம் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

காரப்பட்டு பகுதிகளில் மின் நிறுத்தம்!

மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக வரும் (14.08.2024) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை காரப்பட்டு துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட புதுப்பாளையம், வீராணந்தல், கீழ்குப்பம், மேல்குப்பம், பனைஓலைப்பாடி, மேலபுஞ்சை, வாசுதேவன்பட்டு,…

நாட்டு நலப் பணித்திட்ட முகாமில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது!

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டம் தென்பள்ளிப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள அரவிந்தர் கல்வி குழுமத்தின் சார்பாக அரவிந்தர் வேளாண்மை தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் அரவிந்தர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நாட்டு நலப் பணித்திட்ட…

கலசபாக்கம் மாரியம்மன் ஆலயத்தில் பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபட்டனர்!

கலசபாக்கத்தில் ஆடி மாதம் நான்காவது வெள்ளிக்கிழமை முன்னிட்டு இன்று (09.08.2024) மாரியம்மன் ஆலயத்தில் பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகபட்சமாக 26 மில்லி மீட்டர் மழை!

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக வெம்பாக்கத்தில் 26 மில்லி மீட்டர் மழை பெய்தது. மற்ற பகுதிகளில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-…

கலசபாக்கத்தில் நேற்று முன்தினம் மழையின் அளவு!!

கலசபாக்கத்தில் நேற்று முன்தினம் 16 மில்லி மீட்டர் மழையின் அளவு பதிவாகி உள்ளது.

சுதந்திர தினத்தை ஒட்டி அஞ்சலகங்களில் தேசியக்கொடி விற்பனை!

சுதந்திர தினத்தை ஒட்டி அஞ்சலகங்களில் தேசியக்கொடி விற்பனை. தேசியக்கொடிகளை https://www.epostoffice.gov.in என்ற இணையதள மூலம் ஆன்லைனில் பெறலாம்.

24 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

14 மாவட்ட எஸ்பிக்கள் உட்பட 24 காவல் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு. மாவட்ட எஸ்பிக்கள் நியமனம் • தருமபுரி- மகேஸ்வரன் • திருவண்ணாமலை – பிரபாகர் • வேலூர்-மதிவாணன்…

6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.