Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திற்கு கார்கள் நிற்கும் இடத்தை அறிவித்தது காவல்துறை!!

திருவண்ணாமலையில் பத்தாம் நாளான கார்த்திகை தீபத்திற்கு கார்களை எங்கெல்லாம் நிறுத்தலாம் என்பதற்கான இடத்தை அறிவித்தது காவல்துறை.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2025 – ஐந்தாம் நாள் காலை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா ஐந்தாம் நாளான இன்று (28.11.2025) காலை விநாயகர் ரிஷப வாகனத்திலும், சந்திரசேகரர் கண்ணாடி ரிஷப வாகனத்திலும், வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

கார்த்திகை தீபத் திருவிழா 7-ம் நாள் தேர்த் திருவிழாவிற்காக தேரில் கலசம் பொருத்தும் பணி!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் தீபத் திருவிழா 7-ம் நாள் தேர்த் திருவிழாவிற்காக தேரில் கலசம் பொருத்தும் பணி நடைபெறுகிறது.  

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2025 – நான்காம் நாள் இரவு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா நான்காம் நாளான நேற்று (27.11.2025) இரவு பஞ்ச மூர்த்திகளான  விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் வெள்ளி மயில் வாகனத்திலும், உண்ணாமலை அம்மன் சமேத…

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2025 – நான்காம் நாள் காலை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நான்காம் நாளான இன்று (27.11.2025) காலை விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், சந்திரசேகரர் உண்ணாமுலை அம்மன் நாக வாகனத்திலும், பஞ்ச மூர்த்திகள் மாட வீதி வலம் வந்து பக்தர்களுக்கு…

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2025 – மூன்றாம் நாள் இரவு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா மூன்றாம் நாளான நேற்று (26.11.2025) இரவு சிம்ம மற்றும் வெள்ளி அன்ன வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் மாட வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கலசபாக்கத்தில் வாக்காளர் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!

திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ் அவர்கள் இன்று (25.11.2025) கலசபாக்கம் சத்தியமூர்த்தி நகரில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாயிலாக வாக்காளர் படிவங்களை வீடுகளில் வழங்கும் பணி நடைபெற்று வருவதை…

கார்த்திகை தீபத் திருவிழா – 3ம் நாள் 1,008 சங்காபிஷேகம்!

அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீபத் திருவிழாவின் 3-ம் நாள் நிகழ்வை முன்னிட்டு, சன்னதிக்கு அடுத்த பிரகாரத்தில் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. பின்னர் 1,008 சங்காபிஷேகம் சிறப்பாக நடத்தப்பட்டு பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழா கொப்பரை தயார்!

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா கொப்பரை தயார் நிலையில் உள்ளது. பத்தாம் நாளான புதன்கிழமை ( 03.12.2025 ) அன்று அதிகாலை 04:00 மணிக்கு பரணி தீபமும், அன்று மாலை 06:00 மணியளவில் 2,668…

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2025 – மூன்றாம் நாள் காலை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா மூன்றாம் நாளான இன்று (26.11.2025) காலை விநாயகர், சந்திரசேகரர் பூத வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் மாட வீதி உலா நடைபெற்றது.    

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா 2025 – இரண்டாம் நாள் இரவு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா இரண்டாம் நாளான நேற்று (25.11.2025) இரவு வெள்ளி இந்திர வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் மாட வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

வாக்காளர் சேர்க்கை–திருத்தம்: படிவம் 6 & 8 கிடைக்கிறது!

கலசபாக்கம் பகுதியில் தேர்தல் பணிகள் நடைப்பெற்றுவரும் நிலையில், 2006 டிசம்பர் 31 மற்றும் அதற்குப் பிறகு பிறந்தவர்கள் வாக்காளர் சேர்க்கைக்கான படிவம் 6 மற்றும் உறுதிமொழி படிவங்களை கலசபாக்கம் கிராம நிர்வாக அலுவலகத்தில் பெறலாம்…

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா 2025 – இரண்டாம் நாள் காலை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா இரண்டாம் நாளான இன்று (25.11.2025) காலை அருள்மிகு சந்திரசேகரர் சூரிய பிரபை வாகனத்திலும் விநாயகர் மூஷிக வாகனத்திலும் மாட வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.