Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் பஜார் வீதியில் மின்மாற்றிகள் சரிபடுத்தும் பணி நடைபெற்று வருவதால் மின்சாரம் துண்டிப்பு!

கலசபாக்கம் பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் சாலை சீரமைக்கும் பணி நடைப்பெற்று , மின்மாற்றிகள் சரிபடுத்தும் பணிகளால் மின்சாரம் நிறுத்தபட்டுள்ளது.

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 15ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு!

மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மே 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இதுவரை விண்ணப்பிக்காதவர்களும் https://neet.nta.nic.in/ என்ற இணையதளத்தில் வருகின்ற 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலசபாக்கம் பகுதியில் நடைபெறும் சாலைகள் சீரமைக்கும் பணி!

கலசபாக்கம் பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் JCB இயந்திரங்களை பயன்படுத்தி சாலை சீரமைக்கும் பணி மற்றும் தார் சாலை அமைக்கும் பணி நடைப்பெற்று வருகின்றது.

கலசபாக்கம் ஊராட்சி பகுதியில் கிராம சபா கூட்டம்!

கலசபாக்கம் பகுதியில் மே 1 ஆம் தேதி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் கிராம சபா கூட்டம் நடைபெற்றது.

கலசபாக்கம் ஊராட்சி பகுதியில் மே 1 ஆம் தேதி கிராம சபா கூட்டம்!

நாள்    : 01.05.2022 நேரம் : காலை 10.00 மணி இடம்  : ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி , கலசப்பாக்கம். கலசபக்கம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் நிகழும் 2022 ஆம் வருடம்…

மே 1 ம் தேதி அனைத்து ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்!

மே 1 ம் தேதி அனைத்து ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறும் . சென்ற ஆண்டின் வரவு செலவு அறிக்கை மற்றும் அரசின் திட்டங்கள் பயனாளிகள் சேர்க்கை பற்றி விவாதித்து தீர்மானம் இயற்ற…

திருவண்ணாமலை அடுத்த தானிப்பாடி அருகே உள்ள சி. ஆண்டாப்பட்டு கிராமத்தில் பாறை கல்வெட்டு கண்டெடுப்பு!

திருவண்ணாமலை அடுத்த தானிப்பாடி அருகே உள்ள சி. ஆண்டாப்பட்டு கிராமத்தில் நிலத்தில் உள்ள பாறையில் கல்வெட்டு இருப்பதை திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த தண்டராம்பட்டு ஸ்ரீதர் மற்றும் பழனிச்சாமி ஆகியோர்கள் கண்டறிந்தனர்.…

கலசபாக்கம் அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை திருமாமுடீஸ்வரர் திருக்கோயிலில் சித்திரை மாத பிரதோஷம்!

கலசபாக்கம் அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை திருமாமுடீஸ்வரர் திருக்கோயிலில் சித்திரை மாத பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று (28.04.2022) நந்தி பகவானுக்கும், சுவாமிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை மாத பிரதோஷம்!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் சித்திரை மாத பிரதோஷம் முன்னிட்டு நேற்று (28.04.2022) நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் உச்சி கால சங்காபிஷேகம்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் இன்று (28.4.2022) வியாழன் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் உச்சி கால சங்காபிஷேகம் நடைபெறும்.

புதிய மின் கம்பங்கள் பொருத்தும் பணி-கலசபாக்கம் பஜார் வீதி!

கலசபாக்கம் பஜார் வீதியில், சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருவதால் சாலையில் உள்ள மின் கம்பங்கள் அகற்றப்பட்டு புதிய மின் கம்பங்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

10,11,12 வகுப்பு பொதுத்தேர்வு குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து 10,11,12 வகுப்பு பொதுத்தேர்வுக்கு குறைக்கப்பட்ட பாடத்தில் இருந்து மட்டுமே கேள்விகள் கேட்கப்படும். www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பாடத்திட்ட விவரங்களை அறிந்து கொள்ளலாம் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

பிரதம மந்திரி விவசாயிகளின் நிதி உதவி திட்டம்!

பிரதம மந்திரி விவசாயிகளின் நிதி உதவி திட்டம் (PM – KISSAN Samman Nidhi Yojana). இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6000/- நேரடியாக அவர்களின் வங்கி கணக்கில் வழங்கப்படும். இதன் 11-வது…

ஏரி குளங்களில் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி!

திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகள் ஏரி மற்றும் குளங்களில் இருந்து வண்டல் மண்ணை எடுத்து விவசாய நிலங்களுக்கு பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வண்டல் மண் தேவைப்படும் விவசாயிகள் தங்கள் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பம், சிட்டா நகல்…

ஊர்தோறும் உணவுத் திருவிழா – 2022 கண்ணமங்கலம்!

திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் சுற்றுவட்டார இயற்கை விவசாயிகள் சார்பாக நடைபெறும் ஊர்தோறும் உணவுத் திருவிழாவிற்கு அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்!! இதில் பல்வேறு மரபு உணவு வகைகள், மரபு அரிசி ரகங்கள், பிற தானியங்கள், அவற்றின்…

கலசபாக்கம் ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி திருக்கோவிலில் திருநாவுகரசர் நாயனார் குருபூஜை!

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி திருக்கோவிலில் சித்திரை-13 (26-4-2022) நேற்று சதயம் நட்சத்திரத்தில் திருநாவுகரசர் நாயனார் குருபூஜை நடைபெற்றது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ் அறிவுரை!

காரோண தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த பொது இடங்களில் முகக்கவசம் அணியவும் , சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பொது மக்கள்நக்கூடும் இடங்களில், அனைவரும் முகக்கவசம்…

பருவதமலை பாதுகாப்பு குழு சார்பில் வனங்களில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கவும், மரகன்றுகள் நடவும் ஏற்பாடு!

கலசபாக்கம் அடுத்த பருவதமலை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே வெயிலின் தாக்கம் கடுமையான அதிகரித்து வருகிறது . இதனால் வனங்களில் உள்ள விலங்குகள், பறவைகள் தண்ணீர் தேடி அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு வருவதால் அவைகளுக்கு…