Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2025 – முதல் நாள் இரவு..!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா முதல் நாளான நேற்று (24.11.2025) விநாயகர்- மூஷிக வாகனத்திலும், சுப்பிரமணியர்- மயில் வாகனத்திலும், அண்ணாமலையார் – வெள்ளி அதிகார நந்தி வாகனத்திலும், அம்மன் – வெள்ளி…

திருக்கார்த்திகை தீபத் திருவிழா முதல் நாள் காலை!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா 2025 (24.11.2025) இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. பஞ்சமூர்த்திகள் வெள்ளி விமானங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு…

விநாயகர் மற்றும் சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்!

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, விநாயகருக்கும் சண்டிகேஸ்வரருக்கும் நேற்று சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், இருவரும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். 

திருவண்ணாமலை தீபத் திருவிழாவில் பல்லாவரம் அருணாச்சலா சேவா அறக்கட்டளையின் திருக்குடை உபய நிகழ்வு!

திருவண்ணாமலை தீபத்திருவிழாவை முன்னிட்டு, பல்லாவரம் அருணாச்சலா சேவா அறக்கட்டளை வழங்கிய பஞ்சமூர்த்திகளுக்கான திருக்குடைகள் உபய நிகழ்வு நேற்று (23.11.2025) ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா: கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம்!

திருக்கார்த்திகை தீப திருவிழா – 2025 திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு 64 அடி உயர தங்க கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் கோலாகலமாக இன்று (24.11.2025) தொடங்கியது. பின் வெள்ளி இந்திர…

திருவண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ துர்க்கை அம்மன் திருவீதி உலா!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, நேற்று (21.11.2025) இரவு துர்க்கை அம்மன் (ஊர்க்காவல் தெய்வம்) சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் தீபராதனையுடன் மாட வீதி உலா வெகுவிமர்சையாக நடைபெற்றது.…

2025 திருக்கார்த்திகை தீபத் திருவிழா பத்தாம் நாள் மகாதீபம்!! – அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை மலை உச்சியில் மகா தீபம் ஏற்ற பட உள்ளன. இரவு பஞ்சமூர்த்திகள்- தங்க ரிஷப வாகனத்தில் வீதி உலா…

2025 திருக்கார்த்திகை தீபத் திருவிழா ஒன்பதாம் நாள் விழா!! – அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் ஒன்பதாம் நாள் காலை விநாயகர், சந்திரசேகரர் புருஷா முனி வாகனத்தில் வீதியுலா வர இருக்கின்றனர். இரவு பஞ்சமூர்த்திகள் குதிரை வாகனத்தில் வீதி உலா நடைபெறும்.

2025 திருக்கார்த்திகை தீபத் திருவிழா எட்டாம் நாள் விழா!! – அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் எட்டாம் நாள் காலை விநாயகர் மற்றும் சந்திர சேகர் குதிரை வாகனத்திலும் மாலை பிச்சாண்டவர் உற்சவம் நடைபெறும். இரவு பஞ்சமூர்த்திகள் குதிரை வாகனத்தில் எழுந்தருள உள்ளது…

2025 திருக்கார்த்திகை தீபத் திருவிழா ஏழாம் நாள் விழா!! – அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நடைபெற்று வரும் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் ஏழாம் நாள் விழாவில், பஞ்சமூர்த்திகளின் மகா தேரோட்டம் சிறப்பாக நடைபெற உள்ளது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தேரை இழுத்து சாமி…

2025 திருக்கார்த்திகை தீபத் திருவிழா ஆறாம் நாள் விழா!! – அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நடைபெறவிருக்கும் தீபத் திருவிழா ஆறாம் நாள், காலை வெள்ளி யானையில் சந்திரசேகரர் மாடவீதி உலா மற்றும் 63 நாயன்மார்கள் உற்சவ மூர்த்திகளாக தனித்தனி வாகனங்களில் மாட வீதியுலா வர…

2025 திருக்கார்த்திகை தீபத் திருவிழா ஐந்தாம் நாள் விழா!! – அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் ஐந்தாம் நாள் நிகழ்வுகள்: காலை நிகழ்வு: விநாயகர் ரிஷப வாகனத்திலும், சந்திரசேகரர் கண்ணாடி ரிஷப வாகனத்திலும் திருவீதிகளில் வலம் வர உள்ளனர். இரவு நிகழ்வு:…

2025 திருக்கார்த்திகை தீபத் திருவிழா நான்காம் நாள் விழா!! – அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நான்காம் நாள் நிகழ்வுகள் : காலை விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், சந்திரசேகரர் உண்ணாமுலை அம்மன் நாக வாகனத்திலும், பஞ்ச மூர்த்திகள் மாட வீதியுலா வர…