Web Analytics Made Easy -
StatCounter

நீட் 2025 விண்ணப்பப் பதிவு இன்று கடைசி நாள்!!

2025-26ம் கல்வி ஆண்டிற்கான MBBS, BDS உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். கடந்த மாதம் 7ம் தேதி தொடங்கிய விண்ணப்பப் பதிவு இன்றுடன் நிறைவுபெறுகிறது. விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள மார்ச் 9, 10, 11-ம் தேதிகளில் வாய்ப்பு.

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் நட்சத்திர திருக்கோயிலில் மாசி மாத கிருத்திகை விழா!

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசி மாத கிருத்திகை முன்னிட்டு நேற்று (06.03.2025) முருகன் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை…

கலசபாக்கத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த தென்பள்ளிப்பட்டு பகுதியில் உள்ள வேளாண்மை விரிவாக்கம் மையத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குனர் திரு மா.வடிவேல் தலைமையில் நடைபெற்றது. உடன் வட்டாட்சியாளர் திருமதி.ராஜராஜேஸ்வரி,…

UPI, ATM மூலம் PF பணத்தை எடுக்கலாம்?

மத்திய அரசு UPI செயலிகள் மற்றும் ATM மூலம் உடனடி PF பணம் எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்த திட்டம், ஆன்லைன் கோரிக்கைகள் நிராகரிக்கப்படுவதால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரி சேர்க்கை – 2026

ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில் 2026 ஜனவரி சேர்க்கைக்கான தேர்வு ஜூன் 1, 2025 நடைபெறும். விண்ணப்பிக்க www.rimc.gov.in இணையதளத்தில் பதிவு செய்து, மார்ச் 31, 2025 மாலை 5:45க்குள் விண்ணப்பத்தை தேர்வாணையத்திற்கு அனுப்ப வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.…

பிளஸ் 1 பொதுத்தேர்வு இன்று தொடக்கம்!!

தமிழ்நாட்டில் பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்று(மார்ச் 5) தொடங்கி 27ஆம் தேதி வரை நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை பிளஸ் 1 பொதுத்தேர்வு நடைபெறவிருக்கிறது.  7,557 பள்ளிகளில் இருந்து 8.18 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதுகின்றனர்.    

சி.ஏ., தேர்வு முடிவுகள் வெளியீடு!!

ஜனவரி மாதம் நடைபெற்ற சி.ஏ அடிப்படைத் தேர்வு முடிவுகள் வெளியீடு . தேர்வில் 21.52 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி . 1,10,887 மாணவர்கள் பங்கேற்ற நிலையில், 23,861 மாணவர்கள் தேர்ச்சி.    

வணிகர் தின பொதுக்குழு ஆலோசனைக் கூட்டத்தில் கலசபாக்கம் வணிகர்கள் பங்கேற்பு!

42வது வணிகர் தினம் வரும் மே 5 அன்று மதுராந்தகத்தில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வணிகர்கள் பொதுக்குழு ஆலோசனைக் கூட்டம் இன்று (2025 மார்ச் 4ஆம் தேதி) ஹோட்டல் எல்லோராவில், தமிழ்நாடு…

ஏலந்தபயம் ,ஏலந்தபயம் யேன்.!!! ..சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 மேடையில் கலக்கும் திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை சேர்ந்த தனுமிதா!

விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 துவங்கி உள்ளது . இந்த சீசனில் நமது கலசபாக்கத்தை சேர்ந்த தனுமிதா தனது அசாதாரண பாடல் திறமையால் விஜய் டிவியின் சூப்பர்…

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 7 கடைசி நாள்!

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச்7 கடைசிநாள் மார்ச் 7ஆம் தேதி இரவு 11.50 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு மே 4ஆம் தேதி மதியம்…

திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளுக்கு இலவச விவசாய அடையாள எண் பதிவு !!

திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளுக்கு தனி விவசாய அடையாள எண் பெறுவதற்கு அனைத்து பொதுசேவை மையங்களிலும் (csc) இலவசமாக பதிவுசெய்யலாம். இனிவரும் காலங்களில் அரசு திட்டங்களில் பயன்பெற விவசாய அடையாள எண் முக்கியமானதாகும் என மாவட்ட ஆட்சியர் திரு. தர்ப்பகராஜ் தகவல்…

சென்னை பயணிகளின் கவனத்திற்கு!!

தாம்பரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக தென்மாவட்டங்களில் இருந்து திண்டிவனம் வழியாக தாம்பரம் வரை இயக்கப்படும் அனைத்து பேருந்துகள் நாளை (மார்ச்- 4) முதல் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை மட்டுமே இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.    

பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் இன்று தொடக்கம்!!

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கி மார்ச் 25 வரை நடைபெற உள்ளது நடப்பாண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வை 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுத உள்ளனர் பிளஸ் 2 தேர்வுக்கென தமிழகத்தில் 3,316 தேர்வுகள் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.    

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர்களுக்கு வாழ்த்துக்கள்!

இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் கலசபாக்கம்.காம் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம். அனைவரும் நல்ல மதிப்பெண்கள் பெற்று, தங்கள் கனவுகளை மெய்ப்பிக்க வாழ்த்துக்கள்!