Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் நேற்று (15.01.2025) திருவூடல் உற்சவம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் மாட்டுப்பொங்கல் முன்னிட்டு(15.01.2025) நேற்று இரவு திருவூடல் வீதிகளில் அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் திருவூடல் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள். 

அண்ணாமலையார் கோவிலில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு பெரிய நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்காரம்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு, பெரிய நந்தி பகவானுக்கு அனைத்து விதமான காய்கறிகள் மற்றும் பழ வகைகளால் அலங்கரித்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி…

கலசபாக்கம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் சிறப்பாக கொண்டாடப்பட்ட பொங்கல் விழா!

கலசபாக்கம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில், மாணவியர்களுடன் இணைந்து பொங்கல் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள், மாணவியர்களுடன் பொங்கல் வைத்து, சர்க்கரை பொங்கலை வழங்கி, விழாவைக் கொண்டாடினர்.

கலசபாக்கத்தில் அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ திருமாமுடிஸ்வரர் ஆலயத்தில் இன்று (13.01.2025) ஆருத்ரா தரிசனம்!

கலசபாக்கத்தில் அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ திருமாமுடிஸ்வரர் ஆலயத்தில் இன்று (13.01.2025) ஆருத்ரா தரிசனம் முன்னிட்டு சிவகாமி அம்மாள் சமேத ஸ்ரீ நடராஜர் பெருமாள் சிறப்பு அபிஷேக மற்றும் தீபாராதனை நடைபெற்றது.இதில் திரளான…

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

பொங்கல் பண்டிகை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் புறப்படும் இடங்கள் 10-01-205, 11-01-2025, 12-01-2025 5 13-01-2025 பேருந்துகள் புறப்படும் இடங்கள்: பேருந்து நிலையம் இயக்கப்படும் பேருந்துகள் கிளாம்பாக்கம் KCBT (கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்)…

ஆட்டோ கட்டணம் பிப். 1 முதல் உயர்வு!

பிப்.1 முதல் ஆட்டோ கட்டணம் உயர்கிறது: குறைந்தபட்ச கட்டணம் ரூ.50 என ஆட்டோ ஓட்டுநர்கள் அறிவிப்பு அதன்படி, முதல் 1.8 கி.மீ-க்கு ரூ.50, கூடுதல் கிமீ-க்கு ரூ.18, காத்திருப்பு கட்டணம் ரூ.1.5 என்ற வகையில்…

திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை!

ஜனவரி 13-ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழை பொழிய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  

கலசபாக்கம் – வில்வாரணி சாலை பணிகள்: போக்குவரத்து தற்காலிக மாற்றம்!

கலசபாக்கத்திலிருந்து வில்வாரணி செல்லும் சாலையில் தொ தொடர்ந்து இரண்டாவது நாளாக புதியதாக சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், இந்த சாலையில் போக்குவரத்து தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

WE MART கடை திறப்பு விழா

WE MART கடை திறப்பு விழா திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுக்கா, வடமாதிமங்கலம் கிராமத்தில், WE MART கடை திறப்பு விழா 10.01.2025 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் பட்டாரக…

திருவண்ணாமலையில் மார்கழி மாத கிரிவலம் வர உகந்த நேரம்!

திருவண்ணாமலையில் மார்கழி மாதப் பெளா்ணமி கிரிவலம் (ஜனவரி – 13) திங்கட்கிழமை காலை 5.29 மணிக்கு தொடங்கி செவ்வாய்கிழமை (ஜனவரி – 14) காலை 04:46 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம்…

கலசபாக்கம் அருள்மிகு ஸ்ரீ சொர்க்க நாராயண பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா!

கலசபாக்கம் அருள்மிகு ஸ்ரீ சொர்க்க நாராயண பெருமாள் கோயிலில் இன்று (10.01.2025) வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சொர்க்க வாசல் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் நட்சத்திர திருக்கோயிலில் மார்கழி மாத கிருத்திகை விழா!

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மார்கழி மாத கிருத்திகை திருநாளான நேற்று (09.01.2025) முருகன் பெருமானுக்கு அபிஷேக சிறப்பு ஆராதனை…

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோயிலில் ஏகாதாசி நிகழ்வு!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் இன்று (10.01.2025 ) வெள்ளிக்கிழமை ஏகாதாசி முன்னிட்டு வைகுந்த வாசல் தீபாரதனைக்கு பின் அதிகாலை திறக்கப்பட்டது.

திருவண்ணாமலை பூத நாராயண பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி சிறப்பு விழா!

திருவண்ணாமலை அருள்மிகு பூத நாராயண பெருமாள் திருக்கோயிலில் இன்று (10.01.2025) வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு பூத நாராயண பெருமாள் கருட வாகனத்தில் மாட வீதி உலா நடைபெற்று வருகிறது.

கலசபாக்கம் – வில்வாரணி சாலை போக்குவரத்து நிறுத்தம்!

கலசபாக்கத்திலிருந்து வில்வாரணி செல்லும் சாலையில் புதியதாக சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், இந்த சாலையில் போக்குவரத்து தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை தகவல் தெரிவித்துள்ளது.