Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கத்தில் அத்தியாவசிய பணி காரணமாக மின் நிறுத்தம்!

கலசபாக்கத்தில் இன்று அத்தியாவசிய பணி காரணமாக, காலை 11 மணி முதல் 12 மணி வரை BDO ஆபீஸ், தென்பள்ளிப்பட்டு, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட்டது.

மத்திய அரசு துறைகளில் 14,582 காலிப்பணியிடங்களுக்கு SSC CGL 2025 தேர்வு அறிவிப்பு!

மத்திய அரசு துறைகளில் குரூப் B,C பிரிவுகளில் 14,582 காலிபணியிடங்களை நிரப்புவதற்கான SSC CGL 2025 தேர்வு அறிவிப்பாணை வெளியீடு. தகுதி உள்ளவர்கள், ஜூலை 4-ம் தேதிக்குள் ssc.gov.in என்ற இணையதளத்திலும், mySSC என்ற செயலியிலும் விண்ணப்பிக்கலாம்.  

NEET UG 2025 தேர்வு முடிவுகள் ஜூன் 14-ம் தேதி வெளியீடு!

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்பட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான NEET UG தேர்வு முடிவுகள் வரும் 14-ம் தேதி வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

தட்கல் டிக்கெட்டுகளுக்கு ஆதார் கட்டாயம் !!

ஜூலை 1ம் தேதி முதல் தட்கல் ரயில் டிக்கெட்டுகளைப் பெற ஆதார் எண் கட்டாயம் IRCTC செயலி மூலம் ஆதார் அங்கீகரிக்கப்பட்ட பயனர்கள் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு.

கான்கிரீட் தயாரிப்பு துறையில் பேட்சிங் பிளாண்ட் இயக்குபவருக்கான அரசின் இலவச பயிற்சி! நீங்களும் சேரலாம்

டிகிரி படித்துவிட்டு வேலை தேடும் இளைஞர்களே லட்சக்கணக்கில் தமிழகத்தில் மட்டுமே இருக்கும் பொழுது, பள்ளி படிப்பு கூட முடிக்கவில்லை. ஆனால் வேலைக்கு செல்ல வேண்டும் என்று ஆசையோடு பலர் இருப்பர். அப்படி இருக்கும் நபர்களுக்கு, தொழில்…

7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்    

கலசபாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காற்றுடன் மழை பெய்தது!

கலசபாக்கம் BDO ஆபிஸ் அருகில் சாலையில் மரம் சாய்ந்தது. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பிறகு நெடுஞ்சாலைத்துறை மூலமாக மரம் அகற்றப்பட்டது.

திருவண்ணாமலையில் வைகாசி மாத பவுர்ணமி கிரிவலம் வர சிறந்த நேரம்!

வைகாசி மாத பவுர்ணமி கிரிவலம், 10ம் தேதி (செவ்வாய்) பிற்பகல் 12.32 மணிக்கு தொடங்கி, 11ம் தேதி (புதன்) பிற்பகல் 01:58 மணிக்கு முடிவடைகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் மலை சுற்றி…

கலசபாக்கத்தில் கருட சேவை!

கலசபாக்கத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சுகந்தவல்லி தாயார் சமேத ஸ்ரீ சொக்க நாராயண பெருமாள் திருக்கோவிலில் இன்று 09.06.2025 திங்கட்கிழமை கருட சேவையை முன்னிட்டு சொர்க்க நாராயண பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்து வீதி உலா…

பௌர்ணமி சிறப்பு ரயில்கள்!

ஜூன் 10-ம் தேதி காலை 9:25-க்கு விழுப்புரத்தில் இருந்து புறப்படும் ரயில், காலை 11:10-க்கு திருவண்ணாமலை வந்தடைகிறது. ஜூன் 10-ம் தேதி பிற்பகல் 12:40 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்படும் ரயில், பிற்பகல் 2:15-க்கு…

அண்ணாமலையார் கோயிலில் ரூ.500 கட்டணத்தில் பிரேக் தரிசனம்!!

தினமும் மாலை 4 மணி வரை, ஒரு மணி நேரம் இடைநிறுத்த தரிசனத்திற்கு அனுமதிக்கவும், அதற்காக ஒரு நபருக்கு ரூ.500 கட்டணம் வசூலிக்கவும் கோயில் நிர்வாகம் முடிவு. மேலும் ஆணி பிரமோற்சவம் 10-நாட்கள், ஆடிப்பூர உற்சவம்- 10…

திருவண்ணாமலை மாவட்டத்தில் மஞ்சள் அலர்ட்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜூன் 10-ம் தேதி கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!!

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-1 மற்றும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-1ஏ பதவிகளுக்கான பொதுவான முதல்நிலை தேர்வு ஜீன் 15-ந் தேதி முற்பகல் நடைபெற உள்ளது. தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpscexams.in-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது