Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் அருள்மிகு சுகந்தவள்ளிசமேத சொர்க்கநாராயணபெருமாள் திருக்கோயில் நவராத்திரி முதல் நாள் விழா!

கலசபாக்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சொர்க்க நாராயணன் பெருமாள் கோவிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு 15.10.2023 முதல் நாள் இரவு சொர்க்க நாராயண பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி முதல் நாள்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி முதல் நாள் விழாவில் பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

கலசபாக்கம்.காம் ஊழியர்களுக்கு அத்தியாவசிய திறன்கள் மற்றும் அணுகுமுறை பயிற்சி வழங்கிய தொழில்முனைவோர் பயிற்சியாளரான திரு ஜெ. செந்தில்முருகன்!

20 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு தொழில்முறை அனுபவத்துடன் , நமது கலசபாக்கத்தைச் சேர்ந்த ஒரு சிறந்த தொழில்முனைவோர் பயிற்சியாளரான திரு ஜெ. செந்தில்முருகன் ஜெயவேல், அடுத்த தலைமுறை தொழில்முனைவோரை மேம்படுத்தும் நோக்கில் JB Virtual…

கலசபாக்கத்தில் உலக உணவுதினத்தை முன்னிட்டு அக்.16 இயற்கை விவசாயிகளின் வாரசந்தை!

கலசபாக்கத்தில் உலக உணவு தினத்தை முன்னிட்டு அக்டோபர் -16 உலக உணவுதினத்தை முன்னிட்டு இயற்கை விவசாயிகளின் வாரசந்தையில், • விழாவில், மரபு அரிசி ரகங்கள், காய்கறிகள், பழங்கள் திண்பண்டங்கள் மற்றும் பல உணவுப்பொருள்கள் விற்பனைக்கு…

மகாளய அமாவசையை முன்னிட்டு கோவில்களில் மக்கள் சிறப்பு வழிபாடு!!

மகாளய அமாவசையை முன்னிட்டு கோவில்களில் மக்கள் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர். இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோவில் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். வேதாரண்யம் கோடியக்கரை கடலில் புனித…

திருவண்ணாமலை மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுதாரர்கள், வேலை வாய்ப்பற்றோர்கள் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுதாரர்கள், வேலை வாய்ப்பற்றோர்கள் உதவி தொகை பெற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெறப்பட்ட விண்ணப்ப படிவம் அல்லது www.tnvelaivaaippu.gov.in என்று இணையதளம் மூலமாகவோ – நவம்பர்…

ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 20, 21, 22 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 20, 21, 22 ஆகிய தேதிகளில் சென்னையிலிருந்து 2265 பேருந்துகள் மற்றும் பெங்களூர் கோயம்புத்தூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து 1700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாளய அமாவாசை தினத்தை முன்னிட்டு இன்று கலசபாக்கம் செய்யாற்றங்கரையில் தர்ப்பணம் அளித்தனர்!

புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை தினத்தை முன்னிட்டு இன்று(14.10.2023) தர்ப்பணத்துக்காக பொதுமக்கள் கலசபாக்கம் செய்யாற்றங்கரையில் தர்ப்பணம் அளித்து முன்னோர்களை வழிபட்டு வருகின்றனர்.

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் சிறப்பு பயிற்சி வகுப்புகள்!

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் சனிக்கிழமை(14.10.2023) பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரை Abacus,Handwriting,Calligraphy, Vedic maths போன்ற பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றது. வழங்குபவர்: Concept Learning – திருவண்ணாமலை ஆர்வமுள்ள குழந்தைகள் மற்றும்…

கலசபாக்கம்.காம் பணியாளர்களுக்கு அத்தியாவசிய பிசியோ பயிற்சிகளை அளித்த டாக்டர். தனஞ்செயன் ஜெயவேல்

டாக்டர் தனஞ்செயன் ஜெயவேல், 25 ஆண்டுகால பணி அனுபவம் வாய்ந்த பிசியோதெரபிஸ்ட், இவர் பெங்களூரில் 10க்கும் மேற்பட்ட கிளைகளில் 30க்கும் மேற்பட்ட திறமையான பிசியோதெரபிஸ்டுகள் உள்ள உள்ள ஸ்பெக்ட்ரம் பிசியோ சென்டருக்கு தலைமை வகிக்கிறார்!…

சிலிண்டர்கள் இனி ஞாயிற்றுக்கிழமையிலும் சப்ளை செய்ய வேண்டும் என இந்தியன் ஆயில் நிறுவனம் உத்தரவு!

சிலிண்டர்கள் புக்கிங் செய்த ஒரே நாளில் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்க வேண்டும் எனவும், ஞாயிற்றுக்கிழமையிலும் சிலிண்டர்கள் சப்ளை செய்ய வேண்டும் எனவும் ஏஜென்சிகளுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு இன்று முதல் 26-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சென்னை, திருச்சி, தஞ்சாவூர், சேலம், கோயம்புத்தூர், மதுரை, காரைக்குடி, கும்பகோணம் மற்றும் புதுச்சேரி ஆகியஇடங்களில் இருந்து திருப்பதிக்கு இன்று (13.10.2023) முதல் அக்டோபர் 26 – ஆம் தேதிவரை சிறப்பு…

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத அமாவாசை பிரதோஷம்!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் இன்று (12.10.2023) புரட்டாசி மாதம் இரண்டாவது பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.

திருடுபோன, தொலைந்த கைப்பேசிகளை மீட்க புதிய இணையதளம் தொடக்கம் – தமிழக சைபா் குற்றப்பிரிவு தகவல்!

திருடப்பட்ட மற்றும் தொலைந்த கைப்பேசிகளை மீட்க புதிய இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக சைபா் குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக சைபா் குற்றப்பிரிவு வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசின் தகவல் தொடா்பு…

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி விழா அக்.15 முதல் தொடக்கம்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி விழா அக்டோபர் 15-ம் தேதி தொடங்கி அக்டோபர் 23-ம் தேதி வரை தொடர்ந்து 9 நாட்கள் நடைபெறும். நவராத்திரி முதல் நாளான அக்டோபர் 15-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை…

திருவண்ணாமலையில் நாளை சந்தைப்படுத்துதல் இணையதளம் குறித்த பயிற்சி முகாம்!

திருவண்ணாமலையில் சந்தைப்படுத்துதல் இணையதளம் குறித்த பயிற்சி முகாம் நாளை வெள்ளிக்கிழமை (13-10-2023) காலை 10 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மாவட்ட தொழில் மையத்தில் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் தகவல்…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று குருவார பிரதோஷ வழிபாடு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று குருவார பிரதோஷ வழிபாடு மாலை 4:30 மணிக்கு மேல் 06:00 மணிக்குள் நடைபெறுகிறது.