Web Analytics Made Easy -
StatCounter

விநாயகர் சதுர்த்தி விடுமுறை தேதி மாற்றம் – தமிழ்நாடு அரசு தகவல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை தேதி செப்டம்பர் 17-ஆம் நாள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டு செப்டம்பர் 18 – ஆம் தேதி (திங்கட்கிழமை) விடுமுறை நாளாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று (31-08-2023 ) மிக கனமழைக்கு வாய்ப்பு.

கலசபாக்கத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இரவு பலத்த மழை!

கலசபாக்கத்தில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. காலையில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலையை அடைந்தது.

PSLV-C57 விண்ணில் பாய தயார்!

செப்டம்பர் 2 ஆம் தேதி காலை 11:50 மணிக்கு PSLV- c57 ராக்கெட் மூலம் ஆதித்யா- எல்1 விண்கலம் விண்ணில் ஏவப்படவுள்ளது. சூரியனைக் குறித்து ஆராய்வதற்கான இஸ்ரோ அனுப்பும் முதல் விண்கலம் ஆகும்.

விண்ணில் இன்று சூப்பர் ப்ளூ மூன்!

இன்று 30.08.2023 இரவு 8:37 மணிக்கு சூப்பர் ப்ளூ மூன் அரிய நிகழ்வு விண்ணில் நிகழப் போகிறது. இதனை நாம் வெறும் கண்களால் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக தோன்றும் பௌர்ணமி நிலவை விட…

100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் ஆதார் எண்ணை வங்கி கணக்கில் இணைக்க நாளை கடைசி நாள்!

100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்கள் ஆதார் எண்ணை நாளைக்குள் வங்கி கணக்கில் இணைக்க வேண்டும் என ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கலசபாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை திருமாமுடீஸ்வரர் திருக்கோயிலில் ஆவணி மாதம் சிறப்பு அபிஷேகம்!

கலசபாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை திருமாமுடீஸ்வரர் திருக்கோயிலில் ஆவணி மாதம் (29.08.2023) செவ்வாய்கிழமையான நேற்று சதுர்த்தசி திதியில் சிவகாம சுந்தரி உடனுறை ஸ்ரீ நடராஜர் சுவாமி சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து தீபாராதனை…

கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் 200 குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் 200 குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இந்த விலை குறைப்பு நடைமுறைக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இ-சேவை மையங்களில் விரைவில் பணம் எடுக்கும் வசதி அறிமுகம்!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இ-சேவை மையங்களிலும் இனி பணம் எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அறிவித்துள்ளது.

காலாண்டு தேர்வு மற்றும் விடுமுறை தேதிகள் அறிவிப்பு!

இந்த கல்வியாண்டிற்கான காலாண்டுத் தேர்வுகள், செப்டம்பர் மாதம் 2 வது வாரத்தில் தொடங்கி 27 ஆம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 15 ஆம் தேதியும், 6…

திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்திற்கு 130 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

திருவண்ணாமலையில் ஆவணி மாத பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு வேலூரில் இருந்து 50, சென்னையிலிருந்து 30, திருப்பத்தூரில் இருந்து 30, ஆற்காட்டில் இருந்து 20 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என வேலூர் போக்குவரத்து மண்டலம்…

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பௌர்ணமி முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நாளை (30.08.2023) பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு அனைத்து துறை வாரியாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா.முருகேஷ், அவர்கள்…

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஆவணி மாத பௌர்ணமி பிரதோஷம்!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் திங்கட்கிழமை (28.08.2023) ஆவணி மாத பௌர்ணமி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் தங்க ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர் பவனி நடைபெற்றது. இதில் திரளான…

100 நாள் வேலை திட்டப் பயனாளிகள் ஆகஸ்ட-31 ஆம் தேதிக்குள் ஆதாரை இணைப்பது கட்டாயம்!

100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் ஊதியம் பெற ஆதார் எண்ணை கொண்டு பணம் செலுத்தும் முறைகள் (ABPS – Aadhar Based Payment System) கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் வங்கிக் கணக்கில் ஆதாரை இணைக்க வேண்டும்…

திருவண்ணாமலையில் ஆவணி மாத கிரிவலம் வர உகந்த நேரம்!

திருவண்ணாமலையில் ஆவணி மாதப் பெளா்ணமி கிரிவலம் புதன்கிழமை (ஆகஸ்ட்-30) காலை 10:58 மணிக்கு தொடங்கி வியாழக்கிழமை (ஆகஸ்ட்-31) காலை 07:05 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.