Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் பகுதியில் அத்தியாவசிய பணிக்காக மின் நிறுத்தம்!

கலசபாக்கம் பகுதியில் அத்தியாவசிய பணிக்காக தற்போது மின் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது என மின்சாரவாரியம் தெரிவித்துள்ளது.

10 மற்றும் 11ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

10 மற்றும் 11ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு. நாளை சாதாரண கட்டணத்திலும் மே 30,31 தேதிகளில் தட்கல் முறையிலும் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 1 முதல் 12 வகுப்பு வரை ஜூன் 7ல் பள்ளிகள் திறப்பு!

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றப்பட்டுள்ளது. 1 முதல் 12ம் வகுப்புகள் வரை ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் மகேஷ் கூறியுள்ளார். 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஜூன்…

தமிழ்நாடு பசுமை திட்டத்தின் கீழ் இலவச தேக்கு மரக்கன்றுகள் தனியார் பட்டா நிலங்களில் வனத்துறை மூலம் நடவு செய்ய திட்டம்!

திருவண்ணாமலை மாவட்டம், போளுர் வனச்சரகம், 2023-24 நிதி ஆண்டு தமிழ்நாடு பசுமை திட்டத்தின் கீழ் இலவச தேக்கு மரக்கன்றுகள் தனியார் பட்டா நிலங்களில் வனத்துறை மூலம் நடவு செய்ய திட்டம் உள்ளது. போளுர், கலசபாக்கம்…

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் வழங்கப்படும்!

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் அவரவர் படித்த பள்ளியிலேயே வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சோ்க்கை: தரவரிசைப் பட்டியல் வெளியீடு..!!

அரசு கலை, அறிவியல் கல்லூரி சேர்க்கைக்கு தகுதி பெற்ற மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை கல்லூரிக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்குகின்றன. இவற்றில் இளநிலை…

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் 24 மணிநேரம் காத்திருப்பு!

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வியாழக்கிழமை காலை 24 மணி நேரம் தா்ம தரிசனத்துக்காக காத்திருந்தனா். திருப்பதிக்கு வரும் பக்தர்களின் கூட்டம் கோடை விடுமுறையை முன்னிட்டு அதிகரித்துள்ளது. அதனால் வியாழக்கிழமை காலை 29 காத்திருப்பு…

பிற்படுத்தப்பட்டோர் மிகப் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் மாணவிகளுக்கான பள்ளி விடுதிகளுக்கு ஜூன் 15 வரை விண்ணப்பிக்கலாம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர் மாணவிகளுக்கான பள்ளி விடுதிகளில் இலவசமாக தங்கி படிக்க ஜூன் 15 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் திரு.முருகேஷ் அறிவித்துள்ளார்.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு மே 29-ல் தொடக்கம்!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சிறப்பு ஒதுக்கீட்டு மாணவர்களுக்கான கலந்தாய்வு மே 29ஆம் தேதி முதல் மே 31ம் தேதி வரை நடைபெறும்…

தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர இன்று (24.05.2023) முதல் விண்ணப்பிக்கலாம்!

தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர இன்று (24.05.2023) முதல் ஜூன் 7-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும்,…

கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று கேட்டவரம்பாளையம் உள்வட்ட பகுதிகளுக்கான ஜமாபந்தி!

கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் திருவண்ணாமலை மாவட்ட வளங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அவர்களின் தலைமையில் கேட்டவரம்பாளையம் உள் வட்டம் வீரளூர், மேல்சோழங்குப்பம், வடகரைநம்மியந்தல், காந்தப்பாளையம், சீனந்தல், தேவராயன்பாளையம், ஆதமங்கலம், கெங்கவரம், கிடாம்பாளையம், கேட்டவரம்பாளையம்-1,…