Web Analytics Made Easy -
StatCounter

பிளஸ் 2 பொதுத் தேர்வு நடைபெறுவதை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவவர் ஆய்வு!

திருவண்ணாமலை நகராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் சண்முகா தொழிற்சாலை மேல்நிலைப் பள்ளியில் 13.03.2023 இன்று 12-ஆம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. பா.முருகேஷ் அவர்கள்…

இன்று பொது தேர்வு எழுத உள்ள அனைத்து மாணவ,மாணவிகளுக்கும் கலசபாக்கம்.காம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்!

இன்று முதல், பொதுத்தேர்வு எழுதவுள்ள பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ, மாணவியர்கள்அனைவருக்கும் பதற்றமின்றி, தன்னம்பிக்கையுடன் தேர்வுகளை வெற்றிகரமாக எதிர்கொள்ள கலசபாக்கம்.காம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்!

திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மேற்கொள்ளப்பட்ட வேண்டிய பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நேற்று (10.03.2023) மகளிர் திட்டம் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மேற்கொள்ளப்பட்ட வேண்டிய பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள்…

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக மகளிர் தின விழா!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி பிரியதர்ஷினி அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார். அதில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட…

கலசபாக்கம் பகுதியில் உள்ள ஸ்ரீ அங்களாம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா!

கலசபாக்கம் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ அங்களாம்மன் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழா இன்று(09.03.2023) சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் உற்சவர் பெரிய நாயகருக்கு மகுடாபிஷேகம்!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோவிலில் நேற்று மாலை உற்சவர் பெரிய நாயகருக்கு மகுடாபிஷேகம் நடைபெற்றது .

தமிழகத்தில் மார்ச் 10-ம் தேதி 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் மார்ச் 10 ஆம் தேதி 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெறவுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் மக்கள் நல்வாழ்வுத் துறை மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது; இந்தியா முழவதும் காய்ச்சல் பரவி வருவதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. காய்ச்சலால்…

கலசபாக்கம் பகுதியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ அங்களாம்மன் திருக்கோவிலில் மஹா கும்பாபிஷேக பெருவிழா!

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் நகரில் செய்யாற்றங்கரையில் அமர்ந்து அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ அங்களாம்மன் திருக்கோயிலில் மாசி மாதம் 25 ஆம் நாள் (09.03.2023) வியாழக்கிழமை காலை 10.00 மணிக்குமேல் 11:00 மணிக்குள் மஹாகும்பாபிஷேக பெருவிழா…

அண்ணாமலையார் கோவிலில் நடராஜப் பெருமானுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் நேற்று மாலை (05.03.2023) நடராஜப் பெருமானுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மாசி மாத பௌர்ணமி பிரதோஷம்!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் சனிக்கிழமை (04.03.2023) மாசி மாத பௌர்ணமி பிரதோஷம் முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.

அண்ணாமலையார் கோவிலில் பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கியது!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் நன்கொடையாளர்களுடன் இணைந்து காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12,30 மணி வரை பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி இன்று(04.03.2023) முதல் தொடங்கியது.

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு!

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் ஒன்றியம் கொழப்பலூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.முருகேஷ் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.மற்றும் விநாயகபுரம் ஊராட்சியில் அமைக்கப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பால பணியினை ஆய்வு செய்தார். மற்றும் விநாயகபுரம்…

திருப்பதியில் இனி தரிசன டிக்கெட் பெற ஆதார் கட்டாயம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசன டிக்கெட் பெற இனி ஆதார் கட்டாயம்! வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை, ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றை பயன்படுத்தி தரிசன டிக்கெட் இனிமேல் பெற இயலாது.

திருவண்ணாமலையில் மாசி மாத கிரிவலம் வர உகந்த நேரம்!

தை மாதத்திற்கான பெளா்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த மாதத்திற்கான பெளா்ணமி வரும் 06.03.2023 திங்கட்கிழமை அன்று மாலை 05.08 மணிக்கு தொடங்கி செவ்வாய்க்கிழமை மாலை 06.45 மணிக்கு…

வில்வாரணி துணை மின்நிலையத்தில் இன்று (03.03.2023) மின் நிறுத்தம்!

வில்வாரணி துணை மின்நிலையத்தில் இன்று (03.03.2023) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பூண்டி மற்றும்  திருசூரை சுற்றியுள்ள கிராமங்களில் (மாற்றத்துக்கு உட்பட்டது)…

கலசபாக்கம் அருகே 27 ஆண்டுகளுக்கு பிறகு பிரமோற்சவ தேர் சீரமைப்பு!

கலசப்பாக்கம் அடுத்த துரிஞ்சாபுரம் ஒன்றியம் பூதமங்கலம் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அம்புஜவல்லி சமேத ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேர் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.