Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று அனைத்து வளர்ச்சித் திட்டக் கூட்டம் நடைபெற்றது!

திருவண்ணாமலை மாவட்டம் ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் நடைபெற்று வரும் அனைத்து வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா. முருகேஷ் அவர்கள் தலைமையில் ஆய்வு கூட்டம்…

கலசபாக்கம் சுற்று வட்டார பகுதி விவசாயிகள் நாற்று விடும் பணிகளை தொடங்கினர்!

கலசபாக்கம் சுற்று வட்டார பகுதியில் விவசாயிகள் நெல் நடவிற்காக வயல்களை தயார் செய்தபடி, நாற்று விடும் பணிகளை தொடங்கியுள்ளனர்.

2023ஆம் ஆண்டுக்கான விடுமுறைப் பட்டியலை தமிழக அரசு வெளியீடு!

2022ஆம் ஆண்டு முடிய இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில், 2023ஆம் ஆண்டுக்கான விடுமுறைப் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது! 2023ஆம் ஆண்டுக்கான விடுமுறைப் பட்டியலை தமிழக தலைமைச் செயலாளர் திரு வெ.இறையன்பு அவர்கள்…

சபரிமலை கோவிலில் மண்டல பூஜை தரிசனத்துக்கு ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்!

சபரிமலை கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மற்றும் மகர பூஜைக்காக வரும் நவம்பர் மாதம்15-ஆம் தேதி மாலை நடை திறக்கப்பட்டு நவம்பர் 16 – இல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான ஆன்லைன் முன்பதிவு…

கலசபாக்கம் சார்ந்த சில பகுதிகளில் நாளை (13.10.2022) மின் நிறுத்தம்!

போளூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கலசபாக்கம் பீடரில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மேற்கொள்ள இருப்பதால் நாளை (13.10.2022) வியாழக்கிழமை கரையாம்பாடி, ஆனைவாடி, சாலையனூர், பத்தியவாடி, காலூர்,அணியாலை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல்…

ஸ்ரீ பூண்டி மகான் ஆற்று சுவாமிகளின் 44 ஆம் ஆண்டு குருபூஜை விழா!

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வட்டம், பூண்டி கிராமத்தில் ஸ்ரீ பூண்டிமகான் ஆற்று சுவாமிகளுக்கு ஐப்பசி மாதம் 11ஆம் நாள் (28.10.2022) வெள்ளிக்கிழமை‌ அனுஷ நட்சத்திரத்தில் அவர்தம் ஜீவசமாதியில் குருபூஜை விழா நடைபெற உள்ளது.

எளிதில் பனைமரம் ஏறுவதற்கு உதவும் கருவியை கண்டுபிடிக்கும் நபருக்கு ரூ.1 லட்சம் பரிசு!

எளிதில் பனைமரம் ஏறுவதற்கு உதவும் கருவியை கண்டுபிடிக்கும் நபருக்கு ரூபாய் 1 லட்சம் பரிசாக வழங்கப்படும் என தமிழ்நாடு வேளாண் உற்பத்தி ஆணையம் அறிவித்துள்ளது. போட்டியில் பல்கலைக்கழகங்கள், தனியார் நிறுவனங்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள்…

பருவத மலையை சுற்றியுள்ள பகுதிகளில் தூய்மைப்பணி!

கலசபாக்கம் அடுத்த தென்மகாதேவமங்கலத்தில் உள்ள பருவத மலையை சுற்றியுள்ள பகுதிகளில் வனத்துறையினருடன் போலீசார் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து தூய்மை பணியில் ஈடுபட்டனர். பருவதமலையில் உள்ள பிரசித்தி பெற்ற மல்லிகார்ஜுனேஸ்வரர் சமேத பிரம்மரம்பிகை கோவிலில்…

கலசபாக்கம் நூலகத்தில் “காந்தியை கொண்டாடுவோம்” என்ற தலைப்பில் குழந்தைகளுடன் கலந்துரையாடல்!

கலசபாக்கம் வாசகர் வட்டம் சார்பில் நூலகத்தில் அக்டோபர் 16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு “காந்தியை கொண்டாடுவோம்” என்ற தலைப்பில் குழந்தைகளுடன் கலந்துரையாடல் நடைபெற உள்ளது. இன்றைய சூழலில் காந்திய கொள்கைகள் அவசியம்…

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (10.10.2022) நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்தும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்தும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பா. முருகேஷ் அவர்கள்…

கலசபாக்கம் தபால் நிலையத்தில் தபால் அட்டைகள், தபால் கடிதங்களும் தட்டுப்பாடு நீங்க உடனடி நடவடிக்கை!

பொதுமக்களிடம் கிடைத்த தகவலின்படி கலசபாக்கம் தபால் நிலையத்தில் போதுமான தபால் அட்டைகள், தபால் கடிதங்களும் இல்லாததை நாங்கள் அஞ்சலக மேலாளரை தொடர்பு கொண்டு பேசிய போது அதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர்…

இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக கலசபாக்கம் செய்யாற்றில் வெள்ளம்! விவசாயிகள் மகிழ்ச்சி!

திருவண்ணமலை மாவட்டத்தில் தொடர் மழையால் கலசபாக்கம் சுற்றியுள்ள அனைத்து ஏரிகள் மற்றும் கிணறுகள் நிரம்பி இருப்பதால் இந்தப்பகுதிகளில் விவசாயிகள் மகிழ்ச்சி அடைத்துள்ளனர் …மேலும் இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக செய்யாற்றில் வெள்ளம் செய்கிறது …பல்வேறு…

திருவண்ணாமலை கிரிவல பாதையை நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர்‌ ஆய்வு செய்தார்‌!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர்‌ திருக்கோயிலில்‌ பெளர்ணமி முன்னிட்டு நேற்று (09.10.2022) சுவாமி தரிசனம்‌ செய்ய வரும்‌ பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள்‌ மற்றும்‌ தரிசனம்‌ செய்ய அனுமதிக்கபட்ட வழிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு. பா.முருகேஷ்‌  அவர்கள்‌…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் கண்ணதாசன்!

இந்த வாரம் நமது கலசப்பாக்கம்.காம் அலுவலகத்தில், சென்னையில் பணிபுரிந்து வரும் நம் கலசபாக்கத்தை சேர்ந்த திரு கண்ணதாசன் ஆசிரியர் அவர்கள், அறிவியல் சார்ந்த விளக்கங்களை நேரடி சோதனைகள் மூலம் செய்து காண்பித்து விளக்கினார். நிகழ்வில்…

திருவண்ணாமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று (9.10.2022) கிரிவலம் சென்றனர்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் நேற்று (9.10.2022) புரட்டாசி பௌர்ணமியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் கிரிவலம் சென்றனர்.

கலசபாக்கம் அடுத்த மிருகண்டா அணையில் இருந்து 100 கன அடி தண்ணீர் திறப்பு!

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பம் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள மிருகண்டா அணையின் மொத்த நீர்மட்டம் 22.98 அடி உள்ளது. இதில் தற்போது 100 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இது பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாகவும்…