Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!!

இன்று (செப்டம்பர் 10) தமிழகத்தில் பல பகுதிகளில் மழை பெய்யக்கூடும். குறிப்பாக நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தருமபுரி, விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிக்கப்பட்டுள்ளது.…

திருவண்ணாமலை மாவட்டத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்!!

தேதி: 13.09.2025நேரம்: காலை 9.00 மணி – பிற்பகல் 3.00 மணிஇடம்: அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வெட்டவலம், திருவண்ணாமலைதகுதியுடையவர்கள்8ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்தவர்கள்டிப்ளமோ, ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் படித்தவர்கள்பட்டம் பெற்றவர்கள்பொறியியல் மற்றும்…

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு கால அவகாசம் நீட்டிப்பு!

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (TET) விண்ணப்பிக்கும் கால அவகாசம் 10ஆம் தேதி மாலை 5 மணி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் இணையதளத்தின் சர்வர் கடைசி நாளில் முடங்கியதால் பலரும் கடும் அவதிக்குள்ளாகினர்.  

புதிய பேருந்து சேவை – ஆரணி முதல் கோயம்புத்தூர் வரை

ஆரணி, போளூர்,செங்கம், திருவண்ணாமலை, ஊத்தங்கரை, சேலம் வழியாக கோயம்புத்தூர் செல்லும் புதிய காலை மற்றும் இரவு நேர பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. பயணிகளின் வசதிக்காக இந்த சேவை தினமும் இயக்கப்படும். பேருந்து நேரங்கள்: ஆரணி: காலை…

ஊரக வளர்ச்சித் துறையில் வேலைவாய்ப்பு!

ஊரக வளர்ச்சித் துறையில் 300-க்கு மேற்பட்ட பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியீடு . ஈர்ப்பு ஓட்டுநர், பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர், இரவுக் காவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு செப்.30-ம் தேதி வரை www.tnrd.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.  

பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்து மற்றும் ரயில் சேவை!

பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம், காட்பாடி, விழுப்புரம் பகுதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கம். அதேபோல், சென்னை-திருவண்ணாமலை இடையே பௌர்ணமி ரயில்கள் இயக்கப்படுகின்றன.