Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் ஆற்றில் ( செய்யாற்றில் ) வெள்ளம் மலர்தூவி வரவேற்பு

கலசபாக்கம் ஆற்றில் (செய்யாற்றில்) வெள்ளம் பெருக்கெடுத்தோட வெள்ளத்தை வரவேற்கும் விதமாக தீபம் ஏற்றியும், மலர்களை தூவி வரவேற்ற நமது கலசபாக்கம்.காம் குழுவினர். கலசபாக்கம் ஆற்றில் (செய்யாற்றில்) வரும் புது வெள்ளத்தை மலர்தூவி வணங்கி வரவேற்றபோது……

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்

கலசபாக்கம் தொகுதி தமிழ்நாடு மாநிலத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தின் கீழ் வருகிறது. கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதியின் மொத்த வாக்காளர்களின் சதவீதம் 79.69 சதவீதமாகப் பதிவு செய்யப்பட்டது. 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கலசபாக்கம் தொகுதியில் போட்டியிட்ட…

கலசபாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அணைகளின் கொள்ளளவு விவரம்

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் அணைகளின் கொள்ளளவு விவரம் :-

கலசபாக்கம் சுற்றியுள்ள பகுதியில் நேற்று பெய்த மழையின் அளவு

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பதிவான மழை அளவு விவரம் மில்லி மீட்டரில்: கலசபாக்கம் – 159 மிமீ ஆரணி – 1 மிமீ ஜமுனாமரத்தூர் – 69 மிமீ…

திருவண்ணாமலை மாவட்ட மக்கள் கவனத்திற்கு : பட்டா, விற்பனைக்கு பிறகு உரிமை மாற்ற, மாற்றங்கள் மேற்கொள்ள சிறப்பு முகாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில், நிலங்களை வைத்திருக்கும் குடிமக்களுக்கு: நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பத்திரப் பத்திரங்கள் (பட்டா), விற்பனைக்கு பிறகு உரிமை மாற்றம், மற்றும் விவரங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் பெற ஒரு…

அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் புரட்டாசி மாத வளர்பிறை ‌சதுர்தசி அலங்காரம் தீபாரதனை!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் புரட்டாசி மாத வளர்பிறை ‌சதுர்தசி அருள்மிகு சிவகாம சுந்தரி உடனுறை நடராஜருக்கு ‌நேற்று (19.09.2021) காலை சிறப்பு அபிஷேகம் ‌மாலை சிறப்பு அலங்காரம் தீபாரதனை நடைபெற்றது.

திருவண்ணாமலையில் புரட்டாசி பௌர்ணமி கிரிவலம் – பக்தர்களுக்கு தடை

கொரோனா பரவலைக் கட்டுபடுத்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால், திருவண்ணாமலையில் இம்மாதம் பௌர்ணமி கிரிவலம் நடைபெறும் நாள்களான 20.09.2021 (திங்கட்கிழமை) அன்று காலை 05.20 மணி முதல் 21.09.2021 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை…

திருவண்ணாமலை கோயிலில் ராஜகோபுரம் முன்பு இன்று காலை பந்தக்கால் நடப்பட்டது

அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் 2021 தீபத்திருவிற்கான பந்தகால் நடும் விழா இன்று (16.09.2021) அதிகாலை ராஜகோபுரம் முன் நடைபெற்றது. முன்னதாக திருக்கோவில் மூன்றாம் பிரகாரம் அருள்மிகு சம்பந்த விநாயகர் சன்னதியில் பந்தகாலுக்கு சிறப்பு அபிஷேகம்…

மரக்கன்றுகளை நட்ட சிறுவர்கள்

கலசபாக்கம் அடுத்த மேட்டுப்பாளையம் மதுரா குன்னடிமேடு கிராமத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க தடை விதிக்கப்பட்டதால், அப்பகுதி குழந்தைகள் விநாயகர் சிலை வாங்குவதற்கு வைத்திருந்த தொகையில் மரக்கன்றுகளை வாங்கி நட்டனர்.

கலசபாக்கம் மாணவர்களுக்கு இலவச அடிப்படை கணினிப்பயிற்சி

ஒவ்வொரு சனிக்கிழமையும், கலசபாக்கம் சார்ந்த பகுதியில்  உள்ள மாணவ மாணவியர்கள் பயன்பெறும் வகையில்  www.kalasapakkam.com சார்பில் இலவச அடிப்படை கணினிப்பயிற்சி  அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு  அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இடம்:  JB Soft…

கலசபாக்கம் சார்ந்த மக்களுக்காக

சென்னையிலிருந்து…. கலசப்பாக்கம் பகுதியை சார்ந்த மக்களுக்காக சலுகை கட்டணத்தில் சிறப்பு சேவை… சென்னையில் தங்களுக்கு எந்த வேலை ஆகவேண்டியதாக இருப்பினும் எங்களை அணுகவும், நாங்கள் முடித்தது தருகிறோம். எந்த ஆவணத்தையும், பொருளையும் சென்னையில் எங்கிருந்தாலும்…

கலசபாக்கம் ஆற்றில்(செய்யாற்றில்) தண்ணீர் !

கலசபாக்கம் ஆற்றில்(செய்யாற்றில்) தண்ணீர் ! கடந்த சில வாரங்களில் நமது மாவட்டத்திலேயே கலசபாக்கத்தில் அதிகபட்ச மழை பெய்தது அதை நாம் அறிவோம். செய்யாற்றில் ஓடையாக தெரியும் இந்த நீர் பெருக்கெடுத்து வெள்ளமாக ஓட வேண்டுவோம்.

ஆவணி மாத அமாவாசை பிரதோஷம்

அருள்மிகு உண்ணாமுலை உடனுறை அருணாசலேசுவரர் திருக்கோயில் திருவண்ணாமலை (04.09.2021) சனிக்கிழமை ஆவணி மாதம் 19 மாலை அமாவாசை பிரதோஷம். மூன்றாம் பிரகாரத்தில் பிரதோஷ நாயகர் பவனி ஐந்தாம் பிரகாரம் பெரிய நந்திக்கு சிறப்பு அபிஷேகம்…

மழையில் பழுதடைந்த மின்கம்பம்…துரித நேரத்தில் சரிசெய்த மின் ஊழியர்கள்!

கலசபாக்கம் அடுத்த காப்பலூர் கிராமத்தில் நேற்று இரவு பெய்த பலத்த மழையில் மின்கம்பம் சேதம் அடைந்து இந்த பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டது நேற்று இரவு 10.30 மணிக்கு அளித்த புகாரின் அடிப்படையில் சில…

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கலசப்பாக்கத்தில் 14 செ.மீ மழை பதிவு

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் 14 செ.மீ மழை பதிவு

சீட்டம்பட்டு கிராமத்தில் இளைஞர்களின் முயற்சியில் பனைமர விதைகள் நடப்பட்டன

கலசபாக்கம் அடுத்த சீட்டம்பட்டு கிராமத்தில் இளைஞர்களின் முயற்சியில் கிராமத்தின் ஏரிக்கரை பகுதியில் 3000 பனைமர விதைகள் நடப்பட்டன. மீண்டும் நாளை 2000 பனைமர விதைகள் நட இருக்கிறோம். கலசபாக்கம்.காம் சார்பாக இளைஞர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

அத்திமூரில் இளைஞர்கள் பனைமர விதைகளை நட்டார்கள்

போளூர் அடுத்த அத்திமூர் கிராமத்தில் உள்ள இளைஞர்கள் முயற்சியில் கிராமத்தின் ஏரிக்கரைப் பகுதியில் கடந்த ஒரு வருட காலமாக 2000 பனைமர விதைகளை நட்டு பராமரிக்கப்பட்டு வருகிறார்கள். நேற்று மட்டும் 100 பனைமர விதைகள்…

தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறையின் கீழ் பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு

தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறையின் கீழ் குறைகேள் அதிகாரியாக பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரிகளிடம் இருந்து வரும் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: குறைகேள்…

ஆவணி மாத நடராஜர் அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை!

அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் ஆவணி மாதம் சதுர்த்தசி திதி நடராஜர் அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை

ஆவணி மாத திருவண்ணாமலை கிரிவலத்துக்கு தடை

ஆவணி மாத பவுர்ணமியை ஒட்டி நடைபெற இருந்த திருவண்ணாமலை கிரிவலத்துக்கு தடை விதித்து ஆட்சியர் உத்தரவு இட்டுள்ளார். மக்களின் நலன் கருதி, பவுர்ணமி நாளான வரும் 21ம் தேதி (சனிக்கிழமை ) மாலை 7.…

ஆவணி மாத பிரதோஷ வழிபாடு

அருள்மிகு உண்ணாமுலை உடனுறை அண்ணாமலையார் திருக்கோயிலில், இன்று ‌‌‌(20.08.2021) ஆவணி மாதம் 4 ஆம் நாள் பௌர்ணமி பிரதோஷம் ஐந்தாம் பிரகாரம் பெரிய நந்திக்கு சிறப்பு அபிஷேகம் தீபாரதனை நடைபெற்றது.

அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் ஆடிப்பூரம் நிறைவு விழா!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆடிப்பூரம் பிரமோற்சவ விழா நேற்றுடன் நிறைவடைந்தது. அதையொட்டி, சிவகங்கை தீர்த்தத்தில் தீர்த்தவாரி நடந்தது. ஆடிப்பூரம் நிறைவு விழாவை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதியில்லை. இதனால்,சிவாச்சாரியார்கள் மற்றும் கோயில் ஊழியர்கள் மட்டுமே…

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் ஆடிப்பூரம் உற்சவம் முன்னிட்டு அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்வு

அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் ஆடிப்பூர உற்சவம் நிறைவு.திருக்கோயில் ஐந்தாம் பிரகாரம் சிவகங்கை தீர்த்தக் கரையில் பராசக்தி அம்மன் எழுந்தருள தீர்த்தவாரி நடைபெற்றது.தீர்த்தவாரிக்கு பின் அம்மன் வளைகாப்பு மண்டபம் எழுந்தருள அபிஷேகம் அலங்காரம் தீபாரதனைக்குப்பின் (10.09.2021)…

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் ஆடிப்பூரம் திருவிழா நிறைவு

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் ஆடிப்பூரம் இன்று 10.8.2021 செவ்வாய் நிறைவு பகல் 12.15 க்கு சிவகங்கை தீர்த்தக் குளத்தில் ‌‌‌‌‌‌தீர்த்தவாரி நடைபெற்றது