Web Analytics Made Easy -
StatCounter

மாவட்ட ஆட்சியராக க.தர்பகராஜ் நியமனம்!!

திருவண்ணாமலை புதிய மாவட்ட ஆட்சியராக க.தர்பகராஜ் நியமனம். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக இருந்த இவர் தற்போது திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சபரிமலையில் இந்தாண்டு வருமானம் ரூ.440 கோடி!!

இந்தாண்டு 2 மாத சீசனில் வருவாய் ரூ, 440 கோடி என்று தேவசம் போர்டு அறிவித்துள்ளது. இது கடந்தாண்டை விட ரூ. 80 கோடி அதிகமாகும். கடந்தாண்டு வருமானம் ரூ.360 கோடியாகும். இந்தாண்டு மகர…

நிலுவைத் தொகை செலுத்த சிறப்பு முனைப்பு இயக்கம்!!

வருவாய் வசூல் சட்டத்தின் கீழ் நிலுவைத் தொகை செலுத்த சிறப்பு முனைப்பு இயக்கம்! ஆவணதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, கட்டணத்தை செலுத்தி சான்று பெற்றுக்கொள்ளலாம். முகாம் தேதிகள்: 26.02.2025 & 25.03.2025 இடம்: கலசபாக்கம்…

தமிழ் வளர்ச்சி துறை சார்பில் பள்ளி, மாணவ – மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி!!

திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கல்லூரியில் பிப்ரவரி 5-ம் தேதி (புதன்கிழமை) 6 முதல்12-ம் வகுப்பு பள்ளி மாணவ – மாணவிகளுக்கு காலை 10 மணிக்கும், கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மதியம் 2 மணிக்கும்…

கலசபாக்கம் தபால் நிலையத்தில் நாளை ஆதார் சேவைகள்!!

நமது கலசபாக்கத்தில் உள்ள தபால் நிலையத்தில் நாளை (31-01-2025) ஆதார் கார்டில் பெயர் சேர்ப்பு, பெயர் திருத்தம் மற்றும் பெயர் நீக்கம் செய்தல் ஆகியவை நடைபெறுகின்றன.பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளவும். நேரம் –…

செய்முறை தேர்வு தேதிகள் அறிவிப்பு!!

10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு அறிவியல் பாட செய்முறை தேர்வுகள் அறிவிப்பு. பிப்.22 முதல் 28ம் தேதிக்குள் செய்முறை தேர்வுகளை நடத்தி முடிக்க அரசு தேர்வுகள் இயக்குநர் உத்தரவு.  

கீழ்குப்பத்தில் எருது விடும் விழா மற்றும் ஊரணி பொங்கல் திருவிழா கொண்டாட்டம்!

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே உள்ள கீழ்குப்பம் கிராமத்தில், தை அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீ அம்மச்சார் அம்மன் ஆலயத்தில் ஊரணி பொங்கல் திருவிழா மற்றும் எருது விடும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.விழாவில் கிராம…

குரூப் 2 முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!

குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வு ஹால் டிக்கெட்களை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. www.tnpsc.gov.in, www.tnpscexams.in ஆகிய இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சார் பதிவாளர், துணை வணிகவரி அலுவலர், தொழிலாளர் உதவி ஆய்வாளர் உட்பட…

அனைவர்க்கும் உயர்கல்வி திட்டம்” – திருவண்ணாமலையில் அறிமுகம்! – மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகளை பற்றி கலந்துரையாட VIT வேந்தர் முனைவர். கோ. விசுவநாதன் அழைக்கிறார்!!

அனைத்து மாணவர்களும் உயர்கல்வியை எளிதாக பெறும் வகையில், “அனைவர்க்கும் உயர்கல்வி திட்டம்” திருவண்ணாமலை மாவட்டத்தில் அறிமுகம் செய்யப்படுகிறது. இதற்காக இன்று (ஜனவரி 30, 2025) திருவண்ணாமலையில் சிறப்பான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் விஐடி பலபல்கலைக்கழக…

கலசபாக்கத்தில் ஆற்று திருவிழாவிற்கான பந்தக்கால் நடப்பட்டது!

கலசபாக்கத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் ரதசப்தமி திருவிழாவை முன்னிட்டு இன்று (29.01.2025) காலை முகூர்த்த பந்தக்கால் நடப்பட்டது. வரும் (04.02.2025) செவ்வாய்க்கிழமை, செய்யாற்றில் ஆற்று திருவிழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.  

தை அமாவாசை ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்த பக்தர்கள்!!

தை அமாவாசை தினத்தையொட்டி ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் தர்ப்பணம் செய்து, திதி கொடுக்க குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.    

நாளை விண்ணில் பாய்கிறது 100ஆவது ராக்கெட்!

ஆந்திரா: GSLV F15 ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான கவுண்டவுன் இன்று அதிகாலை தொடங்கியது.இஸ்ரோவின் 100வது ராக்கெட்டான GSLV F15, நாளை(ஜன.29) காலை 6.23 மணிக்கு NVS-02 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்கிறது.  NVS-02 செயற்கைக்கோள் தரை,…

திருவள்ளுவர் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் வெளியீடு!!

திருவள்ளுவர் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் வெளியீடு தேர்வின் முடிவுகள் www.tvu.edu.in என்ற இணையதளத்தின் மூலம் அறியலாம்.    

தை அமாவாசை நாளான இன்று 28-ம் தேதி மற்றும் 31-ம் தேதியில் பத்திரப்பதிவுக்கு கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு!!

ஒரு சார்-பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்குப் பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும், 2 சார்- பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 டோக்கன்கள் ஒதுக்கப்படும். – பதிவுத்துறை அறிவிப்பு.    

கலசபாக்கம் ஆற்று திருவிழா – மணல் சமம் செய்யும் பணிகள் விறுவிறுப்பு!

கலசபாக்கத்தில் வருகின்ற செவ்வாய்க்கிழமை (04.02.2025) அன்று ஆற்று திருவிழா நடைபெற இருப்பதால் கலசபாக்கம் செய்யாற்று மணல் சமம் செய்யும் பணி நடைபெற்று வருகின்றது. விளையாட்டு உபகரணங்கள் தயார் செய்யும் பணி நடைபெற்று வருகின்றது.

பொதுமக்கள் நில ஆவணங்களை இணையதளத்தில் பெறும் புதிய வசதி!

பொதுமக்கள் நில ஆவணங்களை எளிதாக பெறுவதற்கு https://eservices.tn.gov.in/eservicesnew/index.html என்ற இணையதளம் மூலம் அரசு சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில் பொதுமக்கள் தங்களது நில ஆவண பட்டாவுடன் வரைபடத்தையும் பதிவிறக்கம் செய்து கொள்ள தமிழக…

வாடி மச்சினியே ஒரசிட தேடி மச்சினியே!!! ..சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 மேடையில் கலக்கும் திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை சேர்ந்த தனுமிதா!

விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 துவங்கி உள்ளது . இந்த சீசனில் நமது கலசப்பாக்கத்தை சேர்ந்த தனுமிதா தனது அசாதாரண பாடல் திறமையால் விஜய் டிவியின் சூப்பர்…

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் தை மாத அமாவாசை பிரதோஷம்!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (27-01-2025) தை மாத அமாவாசை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்…