Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் முருகர் தெப்பல் உற்சவம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீப விழாவில் நேற்று (16.12.2024) இரவு தெப்பல் உற்சவத்தில் முருகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 

வில்வாரணி துணை மின் நிலையத்தை சார்ந்த பகுதிகளில் இன்று (17.12.2024) மின் நிறுத்தம்!

கலசபாக்கம் பகுதியில் உள்ள வில்வாரணி துணை மின்நிலையத்தில் இன்று (17.12.2024 ) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 09:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை வில்வாரணி, சேங்கபுத்தேரி, சோழவரம்,…

பொடிநடையா போறவரே!!! ..சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 மேடையில் கலக்கும் திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை சேர்ந்த தனுமிதா!

விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 துவங்கி உள்ளது . இந்த சீசனில் நமது கலசப்பாக்கத்தை சேர்ந்த தனுமிதா தனது அசாதாரண பாடல் திறமையால் விஜய் டிவியின் சூப்பர்…

கலசபாக்கத்தில் JB Farm நிறுவனம் விதை பந்துகள் வழங்கும் சேவை!

JB Farm மூலம் உற்பத்தி செய்யப்பட்ட விதை பந்துகள், கலசபாக்கம்.காம், பருவதமலை பாதுகாப்பு குழு மற்றும் வன அலுவலர்கள் உடன் இணைந்து பர்வதமலைக்குச் செல்லும் பக்தர்களுக்கு விதை பந்துகள் வழங்கப்பட்டது.

மார்கழி மாத பிறப்பை ஒட்டி பருவதமலையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்!

கலசபாக்கம் அருகே தென்மாதிமங்கலத்தில் அமைந்துள்ள பருவதமலை, மார்கழி 1 ஆம் வருடப் பிறப்பை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கிறார்கள். திருவண்ணாமலை கிரிவல பாதையை விட பருவதமலை கிரிவல பாதை தொலைவு அதிகம், வெளி…

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீப விழாவில் நேற்று (15.12.2024) இரவு தெப்பல் உற்சவத்தில் பராசக்தி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 

கார்த்திகைத் தீபத் திருவிழாவையொட்டி அண்ணாமலையார் உண்ணாமுலைஅம்மன் கிரிவலம்!

கார்த்திகைத் தீபத் திருவிழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி உண்ணாமுலை சமேத அண்ணாமலையார் நேற்று (15.12.2024) கிரிவலம் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் தெப்பல் உற்சவம்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவின் மகாதீபம் கடந்த 13 – ஆம் தேதி ஏற்றப்பட்டது. அதை தொடர்ந்து நேற்று (14.12.2024 ) இரவு சந்திரசேகரர் அலங்காரம் செய்யப்பட்டு அய்யங்குளத்தில் தெப்பல் உற்சவம் நடைபெற்றது.

சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 மேடையில் திறமையால் சாதனை படைக்கும் கலசபாக்கத்தை சேர்ந்த தனுமிதா!

விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 துவங்கி உள்ளது . தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஆடிஷன்களில் தேர்வு செய்யப்பட்ட திறமையான போட்டியாளர்கள் தற்போது தங்கள் பாடல் திறமையை வெளிப்படுத்தி…

திருவண்ணாமலையில் கார்த்திகை மாத கிரிவலம் வர உகந்த நேரம்!

திருவண்ணாமலையில் கார்த்திகை மாதப் பெளா்ணமி கிரிவலம் (டிசம்பர் – 14) சனிக்கிழமை மாலை 4.17 மணிக்கு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் – 15) மதியம் 03:13 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம்…

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2024 – ஒன்பதாம் நாள் காலை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் ஒன்பதாம் நாளான இன்று (12.12.2024) காலை விநாயகர், சந்திரசேகரர் புருஷா முனி வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.  

கார்த்திகை தீப விழா: கொப்பரை எடுத்துச் செல்லும் காட்சி!

திருவண்ணாமலையில் ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை மகா தீபத்திருவிழா 2024 முன்னிட்டு, அண்ணாமலையார் மகா தீபத்திற்காக பக்தர்கள் பெரிய அளவிலான கொப்பரையும் நெய்யையும் மலையில் ஏற்றும் காட்சி.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2024 – எட்டாம் நாள் இரவு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் எட்டாம் நாளான நேற்று (11.12.2024) மாலை 4.00 மணிக்கு பிச்சாண்டவர் உற்சவம் நடைபெற்றது. இரவு பஞ்சமூர்த்திகள் குதிரை வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 

கலசபாக்கத்தில் இடைவிடாத கனமழை!

கலசபாக்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று அதிகாலை முதல் இடைவிடாத கனமழை பெய்து வருகிறது. மழையால் ஆறுகள், குளங்கள் நீருடன் நிரம்பி வழிகின்றன.

கலைஞர் கைவினை திட்டம்: விண்ணப்பம் தொடக்கம்!

கைவினை கலைஞர்களை தொழில்முனைவோராக வளர்ச்சியடைய உதவும் கலைஞர் கைவினை திட்டத்தில் பயன்பெற விரும்புவோர், இன்று (டிச. 11) முதல் www.msme.tn.gov.in இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. திட்டத்தின் சிறப்பம்சங்கள்: அதிகபட்சமாக…

திருவண்ணாமலை தீபத்திருவிழாவுக்காக திருப்பதியில் இருந்து 250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

திருவண்ணாமலை தீபத்திருவிழாவை முன்னிட்டு, ஆந்திர மாநில போக்குவரத்துக் கழகம் (APSRTC) டிசம்பர் 13, 14, 15 ஆகிய மூன்று நாட்களுக்கு 250 சிறப்பு பேருந்துகளை இயக்கும். முன்பதிவு செய்ய விரும்புவோர் ஏபிஎஸ்ஆர்டிசி செயலி apartconline.in…

ஆரஞ்ச் அலர்ட்: 6 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

இன்று (டிச. 11) கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் அறிவித்துள்ளது. கனமழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்: சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி,…

திருவண்ணாமலை தீப விழா: மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை!

திருவண்ணாமலை மகா தீபத் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் மலையேறும் செயலுக்கு தமிழக அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்த நடவடிக்கை பக்தர்கள் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2024 – எட்டாம் நாள் காலை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் எட்டாம் நாளான இன்று (11.12.2024) காலை விநாயகர் மற்றும் சந்திர சேகர் குதிரை வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.