Web Analytics Made Easy -
StatCounter

துணை மருத்துவக் கல்லூரி விண்ணப்பம் இன்று முதல் தொடக்கம்!

துணை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்கியது, ஜூலை 7-ந் தேதி மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. கலந்தாய்வில் பங்கேற்க www.tnmedicalselection.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

6ஆம் ஆண்டு நினைவு தினம்

JB SOFT SYSTEM நிறுவனர் திரு ஜெ சம்பத் அவர்களின் அன்புத் தந்தை மறைந்த திரு.P G ஜெயவேல் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நாளை இலவச கண் சிகிச்சை முகாம்!

கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நாளை இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெறுகிறது. நாள்: 14.6.2025 சனிக்கிழமை நேரம்: காலை 10:00-2:00 மணி வரை இடம்: ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பஞ்சாயத்து அலுவலகம் பின்புறம்…

பி.டெக் மற்றும் கால்நடை படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பம் அதிகரிப்பு!!

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மருத்துவ படிப்பிற்கு 16,339 பேரும், பி.டெக் படிப்புக்கு 3,978 பேரும் விண்ணப்பித்துள்ளனர். ஜூன்-20 வரை விண்ணப்பிக்கலாம்.    

கலசபாக்கம் அடுத்த நட்சத்திர முருகர் கோயிலில் சங்காபிஷேகம்!

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோயில் பகுதியில் சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இங்கு 27 நட்சத்திரங்களும் வழிபடக்கூடிய கோயில் கும்பாபிஷேகம் 2012ம் ஆண்டு நடைபெற்றது. கும்பாபிஷேகம் செய்யப்பட்டநாள் கோயிலின் ஜென்ம…

திறனாய்வுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!

மாணவர்கள் www.dge.tn.gov.in இணையதளத்தில் முடிவுகளை காணலாம். மொத்தம் 1,000 மாணவர்களுக்கு இளநிலை பட்ட படிப்பு வரை, மாதம் 31,000 என்ற அடிப்படையில் 10 மாதங்கள் உதவித்தொகை வழங்கப்படும்.

கலசபாக்கத்தில் அத்தியாவசிய பணி காரணமாக மின் நிறுத்தம்!

கலசபாக்கத்தில் இன்று அத்தியாவசிய பணி காரணமாக, காலை 11 மணி முதல் 12 மணி வரை BDO ஆபீஸ், தென்பள்ளிப்பட்டு, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட்டது.

மத்திய அரசு துறைகளில் 14,582 காலிப்பணியிடங்களுக்கு SSC CGL 2025 தேர்வு அறிவிப்பு!

மத்திய அரசு துறைகளில் குரூப் B,C பிரிவுகளில் 14,582 காலிபணியிடங்களை நிரப்புவதற்கான SSC CGL 2025 தேர்வு அறிவிப்பாணை வெளியீடு. தகுதி உள்ளவர்கள், ஜூலை 4-ம் தேதிக்குள் ssc.gov.in என்ற இணையதளத்திலும், mySSC என்ற செயலியிலும் விண்ணப்பிக்கலாம்.  

NEET UG 2025 தேர்வு முடிவுகள் ஜூன் 14-ம் தேதி வெளியீடு!

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்பட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான NEET UG தேர்வு முடிவுகள் வரும் 14-ம் தேதி வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

தட்கல் டிக்கெட்டுகளுக்கு ஆதார் கட்டாயம் !!

ஜூலை 1ம் தேதி முதல் தட்கல் ரயில் டிக்கெட்டுகளைப் பெற ஆதார் எண் கட்டாயம் IRCTC செயலி மூலம் ஆதார் அங்கீகரிக்கப்பட்ட பயனர்கள் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு.