Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தில் இன்று போளூர் தாலுகாவில் ஆய்வு!

“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தில் கலெக்டர் திரு. பாஸ்கர பாண்டியன் போளூர் தாலுகாவில் இன்று (31.01.2024) காலை 9 மணி முதல் நாளை காலை 9 மணி வரை மக்களுக்கான சேவைகள் அனைத்தையும்…

திருவண்ணாமலை மாவட்ட அலுவலக கூட்டரங்கில் நேற்று (29.01.2024) மக்கள் குறை தீர்வு நாள்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், நேற்று (29.01.2024) நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. தெ.பாஸ்கர பாண்டியன், அவர்கள் பெற்றுக்கொண்டார்.

“உங்களைத் தேடி உங்கள் ஊரில்”- மக்கள் குறைதீர்வு திட்டம் நாளை முதல் அமல்!

மக்களின் குறைகளுக்கு தீர்வு ஏற்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்ட ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில் எனும் திட்டம்’ சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் நாளை அமல்படுத்தப்படுகிறது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நிறுத்தப்படும் நடைமேடை எண்கள் அறிவிப்பு!

தென் மாவட்ட பேருந்துகள் அனைத்தும் இன்று (30-01-2024) முதல் சென்னை கிளாம்பாக்கத்தில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் மற்றும் மாதவரம் புறநகர் பேருந்து முனையம் ஆகியவற்றில் இருந்து இயக்கப்படும். கன்னியாகுமரி, நாகர்கோவில், மார்த்தாண்டம்,…

TNPSC குரூப்4 தேர்வுக்கான விண்ணப்பம் இன்று (30.01.2024) வெளியீடு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2024 – ஆம் ஆண்டு நடக்க இருக்கும் குரூப்4 தேர்வுக்கான விண்ணப்பம் இன்று (30.01.2024) வெளியிட்டது. ஜூன் 9-ம் தேதி காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30…

திருவண்ணாமலை – சென்னை வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்துகள் இனி கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கம்!

ஆரணி, வந்தவாசி, செய்யாறு, போளூரில் இருந்து சென்னை செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை இயக்கப்படும் என திருவண்ணாமலை மண்டல பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.

போளூரில் இருந்து மேல்சோழங்குப்பம் வழியாக சென்னை செல்லும் பேருந்து நேர விவரம்!

போளூரில் இருந்து கலசபாக்கம், வில்வாரணி, சோமந்தபுத்தூர், ஆதமங்கலம் புதூர், மேல்சோழங்குப்பம் போன்ற புதிய (148) வழித்தடத்தில் பேருந்து இயக்கப்படுகின்றது. போளூரிலிருந்து காலை 08.00 மணியளவில் இயக்கப்படுகின்றது. மேல்சோழங்குப்பம் இருந்து 9.15 மணியளவில் இயக்கப்படுகின்றது. பிறகு…

தென்மாவட்டங்களுக்கு செல்லும் TNSTC பேருந்துகளும் ஜனவரி 30ஆம் தேதி முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து செல்லும்!

செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்படும் என தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.

சென்னை மாநகர பேருந்துகளில் UPI மூலம் டிக்கெட் பெறும் வசதி சோதனை முறையில் அறிமுகம்!

சென்னை மாநகர பேருந்துகளில் UPI மூலம் டிக்கெட் பெறும் வசதி சோதனை முறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக பல்லாவரம் பேருந்து பணிமனையின் கீழ் இயங்கும் பேருந்துகளில் UPI மற்றும் கார்டுகளை பயன்படுத்தி டிக்கெட்…

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் விவசாயத்துறை இயக்குனராக பணியிடை மாற்றம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்த திரு பா.முருகேஷ் அவர்கள் விவசாயத்துறை இயக்குனராக பணியிடை மாற்றம்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பணியிடைமாற்றம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் திரு தெ.பாஸ்கரபாண்டியன் அவர்கள் புதிய ஆட்சியராக பதவி ஏற்றுக் கொண்டார்.

TNPSC, SSC, IBPS, RRB உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்த தமிழ்நாடு அரசு திட்டம்!

TNPSC, SSC, IBPS, RRB உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்த தமிழ்நாடு அரசு திட்டப் பயிற்சியில் சேர விரும்பும் தேர்வர்கள், பிப். 12ம் தேதிக்குள் http://cecc.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும்…

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் நேற்று ஆயுதப்படை மைதானத்தில் தேசிய கொடியினை ஏற்றி மரியாதை செலுத்தினார்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள ஆயுதப்படை மைதானத்தில் நேற்று (26.01.2024) நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா.முருகேஷ், அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை…

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் இன்று சிறப்பு அறிவியல் பயிற்சி பட்டறை வகுப்பு!

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் இன்று (27.01.2024) சனிக்கிழமை பிற்பகல் 2 மணி அளவில் AID India அமைப்பின் மூலம் மாணவர்களுக்காக அறிவியல் பயிற்சி பட்டறை வகுப்புகள் நடைபெற உள்ளன. இதில் ஆர்வம் உள்ள குழந்தைகள் கலந்து…

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் இன்று (25.01.2024) தைப்பூச தீர்த்தவாரி!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் இன்று (25.01.2024) தைப்பூசம் முன்னிட்டு ஈசான்ய குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 14வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி!

கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 14வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு இன்று (25.01.2024) ஆரணி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.தனலட்சுமி அவர்கள் கொடி அசைத்து விழிப்புணர்வு துவங்கி வைத்தார். உடன் கலசபாக்கம் வட்டாட்சியர் திருமதி.ராஜேஸ்வரி மற்றும்…

மதுரை கீழக்கரை ஏறுதழுவுதல் அரங்கத்தில் அருங்காட்சியகமாக கலசபாக்கம் ஆதமங்கலம் -கெங்கவரம் சாலையில் உள்ள மஞ்சுவிரட்டி நடுகல் மாதிரி வைக்கப்பட்டுள்ளது!

கலசபாக்கம் ஆதமங்கலம் – கெங்கவரம் சாலையில் உள்ள மஞ்சுவிரட்டி நடுகல்லும் (மாதிரி), வேட்டவலம் அடுத்த செஞ்சி நல்லான்பிள்ளை பெற்றாள் பாறை கிறலில் உள்ள ‘மாடும் வீரனும்’ உள்ள புகைப்படங்கள் மதுரை கீழக்கரையில் ஏறுதழுவுதல் அரங்கத்தில்…