Web Analytics Made Easy -
StatCounter

2024 – ஆம் ஆண்டு நடைபெற உள்ள TNPSC தேர்வு அட்டவணை வெளியீடு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2024 – ஆம் ஆண்டு நடைபெற உள்ள TNPSC தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் 2024-க்கான மின்னணு வாக்கு இயந்திரங்கள் செயல்படும் முறை விளக்கம்!

மக்களவைத் தேர்தல் 2024-க்கான மின்னணு வாக்கு இயந்திரங்கள் செயல்படும் முறை விளக்க மையம் கலசபாக்கம் தாலுகா அலுவலகத்தில் இயங்கி வருகிறது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் இன்று (20.12.2023) மூன்றாம் நாள் உற்சவம்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவில் இன்று (20.12.2023) மாணிக்கவாசகர் உற்சவம் மூன்றாம் நாள் காலை மாணிக்கவாசகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பிறகு, மாட வீதியில் சுவாமி வலம் வந்தார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் நேற்று (19.12.2023) இரண்டாம் நாள் உற்சவம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் நேற்று (19.12.2023) மாணிக்கவாசகர் உற்சவம் இரண்டாம் நாள் இரவு நடராஜர் பெருமாள் மற்றும் சிவகாமி அம்மாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வருவாய் கோட்டம் சார்பில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கு வெள்ள நிவாரண பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் அனுப்பி வைப்பு!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் முகாம் அலுவலகத்திலிருந்து, ஆரணி வருவாய் கோட்டம் சார்பில், பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கு ரூ. 7.25 இலட்சம் மதிப்பில் வெள்ள நிவாரண பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனத்தை…

ஆதார் அப்டேட் செய்ய மீண்டும் வாய்ப்பு – காலக்கெடு 2024 வரை நீட்டிப்பு!

இந்தியாவில் முக்கிய அடையாள ஆவணமாக விளங்கும் ஆதார் கார்டை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டாயம் அப்டேட் செய்ய வேண்டும் என ஆதார் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. தற்போது இந்த காலக்கெடுவை அரசு அடுத்த ஆண்டு…

திருவண்ணாமலையில் கூட்டுறவு சங்க உதவியாளர் பணிக்கான நுழைவுச்சீட்டு பதிவிறக்கும் இணையதளம் வெளியீடு!

திருவண்ணாமலையில் வரும் 24ஆம் தேதி நடைபெற உள்ள கூட்டுறவு சங்க உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வுக்கு தபால் வழியாக நுழைவுச்சீட்டு அனுப்பப்பட மாட்டாது. தேர்வு எழுத தகுதியானவர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் நுழைவுச்சீட்டு…

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் (23.12.2023) சனிக்கிழமை சொர்க்கவாசல் திறப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருகின்ற (23.12.2023) தேதி சனிக்கிழமை அதிகாலை 1:45 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு என்று செயல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலையார் திருக்கோயிலில் மாணிக்கவாசகர் மார்கழி உற்சவம் முதல் நாள்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் நேற்று இரவு (18.12.2023) மாணிக்கவாசகர் உற்சவம் முதல் நாள் இரவு நடராஜர் அலங்காரம் மற்றும் தீபாராதனை பெருந்திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மாணிக்கவாசகர் மாட வீதி உலா!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் மாணிக்கவாசகர் உற்சவம் ‌மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்!

கலைஞர் நூற்றாண்டு விழா முன்னிட்டு செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் வரும் (22.12.2023) தேதி காலை 9 மணி முதல் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர்…

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் சனி பெயர்ச்சி விழா – ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்!

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் 20.12.2023 ஆம் தேதி சனி பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளதால் கட்டண தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது. https://thirunallarutemple.org/ என்ற இணையத்தளத்திலும் மற்றும் கோவில் வளாகத்தில் நேரடியாகவும் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்ச் மாதத்துக்கான 300 ரூபாய் டிக்கெட்டுகள் இன்று முதல் ஆன்லைனில் வெளியீடு!

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூ.300 தரிசன டிக்கெட், கட்டண சேவை டிக்கெட்டுகள் இன்று (18.12.2023) துவங்கி டிசம்பர் 27 – ஆம் தேதி வரை ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.…

அண்ணாமலையார் திருக்கோவிலில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு உற்சவ மூர்த்திகள் வெள்ளி கவசத்தால் அலங்கரிப்பு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு நேற்று (17.12.2023) பெரிய நாயகர் மற்றும் பராசக்தி அம்மன் வெள்ளி கவசத்தால் அலங்கரிக்கப்பட்டு, மூன்றாம் பிரகாரத்தில் வலம் வந்து பக்கதர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் ஆயிரக்கணக்கான…

மார்கழி மாத பிறப்பை ஒட்டி பருவதமலை சுற்றி 26 கிலோமீட்டர் தூரம் பக்தர்கள் கிரிவலம்!

கலசபாக்கம் அடுத்த தென்மாதிமங்கலம் மற்றும் கடலாடி இடையே அமைந்துள்ள பருவதமலை 4560 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இதில் பிரம்ம சமேத மல்லிகார்ஜுனார் கோவில் உள்ளது. நேற்று (17.12.2023) மார்கழி மாத பிறப்பை ஒட்டி பருவதமலை…

கனமழையால் நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு ஒத்திவைப்பு!

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பொழிந்து வரும் கனமழை காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் இன்று (18.12.2023) நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

கலசபாக்கம் அருகில் அமைந்துள்ள பருவதமலையில் வருடத்திற்கு ஒருமுறை நிகழும் அற்புத கிரிவலம்!

நாளை மார்கழி 1 (17.12.2023) ஞாயிற்றுக்கிழமை உள்ளூர்,வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பருவதமலை கிரிவலம் வருவார்கள். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மற்றுமொரு சிவன் தலம் பர்வத மலை. இம்மலை மிகவும் தொன்மையானது.…