Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மார்கழி மாத பௌர்ணமி பிரதோஷம்..!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (04.1.2023) மார்கழி மாத பௌர்ணமி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.

கலசபாக்கம் அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை திருமாமுடீஸ்வரர் திருக்கோயிலில் மார்கழி மாத பெளா்ணமி பிரதோஷம்!

கலசபாக்கம் அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை திருமாமுடீஸ்வரர் திருக்கோயிலில் மார்கழி  மாத பெளா்ணமி பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று  (04.01.2023) நந்தி பகவானுக்கும், சுவாமிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. 

திருவண்ணாமலையில் மார்கழி மாத கிரிவலம் வர உகந்த நேரம்!

திருவண்ணாமலையில் மார்கழி மாதப் பெளா்ணமி கிரிவலம் நாளை வெள்ளிக்கிழமை (ஜன.6) அதிகாலை 02.57 மணிக்கு தொடங்கி சனிக்கிழமை (ஜன.7) அதிகாலை 04.58 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா்…

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 3 நாட்களுக்கு 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 3 நாட்களுக்கு 16,932 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்பவர்களின் வசதிக்காக, வரும் 12-ம்…

TET – ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் – 2க்கான தேர்வு தேதி அறிவிப்பு..!

ஆசிரியர் தகுதித் தேர்வில் தாள் 2க்கான தேர்வு ஜனவரி 31ம் தேதி தொடங்கி பிப்ரவரி 12ம் தேதி வரை கணினி வழியில் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இந்த கணினி வழித் தேர்வுக்காக பயிற்சி தேர்வு…

கலசபாக்கம் சுற்றுவட்டார உழவர்கள் நடத்தும் பொங்கல் விழா!

கலசபாக்கம் சுற்றுவட்டார உழவர்கள் ஏற்பாடு செய்யும் பொங்கல் விழா கொண்டாட்டம் மண்சார்ந்த மக்களின் உணவும் – உரையாடலுமாக நாளை (05.01.2023) வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. காலை 10 மணி முதல் 1 மணி வரை கலந்துரையாடலும் மற்றும்…

12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியீடு..!!

தமிழகத்தில் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் நாளை (04.01.2023) வெளியாக உள்ளது. அனைத்து பள்ளிகளும் நாளை (புதன்கிழமை, ஜனவரி 4ஆம் தேதி) பிற்பகல் 2 மணி முதல் மாணவர்களின்…

பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன்கள் இன்று முதல் விநியோகம்..!!

தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று (03.01.2023) முதல் வீடு, வீடாக விநியோகம் செய்யப்பட உள்ளது. பொங்கல் பண்டிகைக்கான ரூ,1000, கரும்பு, பச்சரிசி மற்றும் சர்க்கரை பெற ஸ்மார்ட் கார்டுடன் கைரேகை…

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோயிலில் வைகுந்த வாயில் திறப்பு..!!

வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு இன்று (02.01.2023) திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோயிலில் வைகுந்த வாயில் அருள்மிகு வேணுகோபால சுவாமிக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாரதனைக்கு பின் திறக்கப்பட்டது.

கலசபாக்கம் அடுத்த மேல்வில்வராயநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஒன்றிய அரசின் தரச் சான்று!

கலசபாக்கம் அடுத்த மேல்வில்வராயநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஒன்றிய அரசு தரச் சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து சுகாதார நிலையத்தில் நிதி ஒதுக்கீடு செய்து கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது. தமிழக முழுவதும் உள்ள…

கலசபாக்கத்தில் இயற்கை விவசாயிகள் நடத்தும் வாரச்சந்தை!

கலசபாக்கத்தில் வாரந்தோறும் நடைபெறும் இயற்கை விவசாயிகள் நடத்தும் வாரச் சந்தையில் இன்று(30.12.2022) நல் ஆழ்வாரின் நினைவு தினத்தை முன்னிட்டு விவசாயிகள் விளைவித்த இயற்கை பொருட்களை வைத்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.இதில் பாரம்பரிய விதைகள் & மூலிகை…

அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் ஆருத்ரா திருவிழா 2022!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் ஆருத்ரா திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று (29.12.2022) மாணிக்கவாசகர் உற்சவம் மற்றும் ஸ்ரீ நடராஜர், சிவகாமி சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி…

10,12-ம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு..!!

10, 12-ஆம் வகுப்புகளுக்கான 2023-ஆம் ஆண்டு பொதுத் தோ்வு கால அட்டவணையை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வியாழக்கிழமை வெளியிட்டது. 12-ம் வகுப்பு தேர்வுகள் 2023 பிப்ரவரி 15ல் தொடங்கி ஏப்ரல் 5-ம் தேதி வரை…

2023-ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரிய அட்டவணை வெளியீடு..!!

2023ம் ஆண்டு நடத்தப்பட உள்ள தேர்வுகளின் உத்தேசப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தேர்வுகள் மூலம் 15,149 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 2023-ல் உதவி பேராசிரியர், பட்டதாரி ஆசிரியர், ஆசிரியர் தகுதி தேர்வு…

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31 கடைசி நாள்!

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31 கடைசி நாள் அறிவித்த நிலையில், கலசபாக்கம் மின்சார வாரிய அலுவலகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்கும் பணி நடைபெற்று வருகின்றது.

மார்ச் 31க்குள் பான், ஆதார் இணைக்காவிடில் பான் எண் செயல்படாது..!

வரும் 2023ம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதிக்குள் உங்கள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை எனில், ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து பான் கார்டு செயலிழந்துவிடும் என வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கலசபாக்கம் ஆற்று திருவிழா 2023: தீர்த்தவாரி உற்சவ பத்திரிகை!

கலசபாக்கம் செய்யாற்றில் ஆண்டுதோறும் நடைபெறும் பழமை வாய்ந்த “ஸ்ரீ அபித குஜலாம்பாள் சமேத ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர்” கோவில் ஆற்றுத் திருவிழா மற்றும் அண்ணாமலையார் தீர்த்தவாரி நிகழ்வு வரும் தை மாதம் 14 தேதி 28.01.2023…