Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை கார்த்திகை தீபம் திருவிழா 2022 – எட்டாம் நாள் மாலை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா எட்டாம் நாளான நேற்று (04.12.2022) மாலை பிட்சாண்டவர் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை கார்த்திகை தீபம் திருவிழா 2022 – எட்டாம் நாள் காலை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா எட்டாம் நாளான நேற்று (04.12.2022) காலை விநாயகர், சந்திரசேகரர் குதிரை வாகனத்தில் மாட வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இந்த வாரம் கணினி பயிற்சி வகுப்பில் Google Map செயலி பற்றி கற்பிக்கப்பட்டது!

 நமது கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் இந்த வாரம் கணினி பயிற்சி வகுப்பில் குழந்தைகளுக்கு கணினி மூலம் ஓரிடத்தில் இருந்து மற்ற இடத்திற்கு எவ்வளவு தொலைவு இருக்கின்றது என்ற தகவலை Google Map என்ற இணையத்தளத்தின் மூலம்…

மகா தீபம், பரணி தீபம் காண இணையதளத்தின் மூலம் கட்டண அனுமதி சீட்டு – நாளை முதல் வெளியீடு..!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நடைபெற்று வரும் கார்த்திகை தீபத் திருவிழாவில் வருகிற 6-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படுகிறது. இதனை காண்பதற்கு ரூ.500 கட்டணத்தில் 500 அனுமதி சீட்டுகளும்,…

திருவண்ணாமலை கார்த்திகை தீபம் திருவிழா 2022 – ஏழாம் நாள் காலை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா வெகு விமரிசையாக நடந்து வருகின்றது.இந்நிலையில் கார்த்திகை தீபத் திருவிழாவின் 7ம் நாளான இன்று (03.12.2022) காலை 05:30 மணி முதல் விருச்சிக லக்கினத்தில் விநாயகர் தேரை வடம்…

திருவண்ணாமலை கார்த்திகை தீபம் திருவிழா 2022 – ஆறாம் நாள் இரவு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா ஆறாம் நாளான நேற்று (02.12.2022) இரவு வெள்ளி ரதம், வெள்ளி விமானங்களில் பஞ்ச மூர்த்திகள் மாட வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கலசபாக்கத்தில் இயற்கை விவசாயிகள் நடத்தும் வாரச்சந்தையின் இந்த வார நிலவரம்!

கலசபாக்கத்தில் இயற்கை விவசாயிகள் நடத்தும் வாரச்சந்தையில் 12 வது வாரமான இன்று (02.12.2022) மண்ணின் சிறப்பு கொண்டாட்டமான கார்த்திகை தீபத்தில் பனையின் பல்வேறு கொண்டாட்ட அம்சங்களில் ஒன்றான மாவலி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும்,…

திருவண்ணாமலை கார்த்திகை தீபம் திருவிழா 2022 – ஆறாம் நாள் காலை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா ஆறாம் நாளான இன்று (02.12.2022) காலை விநாயகர், சந்திரசேகரர் 63 நாயன்மார்களுடன் வெள்ளி யானை வாகனத்தில் மாட வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருவண்ணாமலை கார்த்திகை தீபம் திருவிழா 2022 – ஐந்தாம் நாள் இரவு!

 திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா ஐந்தாம் நாளான நேற்று (01.12.2022) இரவு வெள்ளி பெரிய ரிஷப வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் மாட வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் டிஜிபி திரு.சைலேந்திரபாபு அவர்கள் ஆய்வு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு நேற்று(01.12.2022) டிஜிபி திரு.சைலேந்திரபாபு அவர்கள் ஆய்வு மேற்கொண்டார் உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. பா. முருகேஷ் அவர்கள் , மாவட்ட கண்காணிப்பாளர் எஸ்.பி…

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழாவில் மலையேறும் பக்தர்களுக்கு நிபந்தனைகள் வெளியீடு!

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் வருடம் தோறும் கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகின்றது. வரும் டிசம்பர் 6ஆம் தேதி காலை பரணி தீபமும் அன்று மாலை 6 மணிக்கு மகா…

திருவண்ணாமலை கார்த்திகை தீபம் திருவிழா 2022 – ஐந்தாம் நாள் காலை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா ஐந்தாம் நாளான இன்று (01.12.2022) காலை விநாயகர், சந்திரசேகரர் கண்ணாடி ரிஷப வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் மாட வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்கள்.

கலசபாக்கம் அடுத்த பிராயம்பட்டு கிராமத்தில் மஹா கும்பாபிஷேகம்!

கலசபாக்கம் அடுத்த பிராயம்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் திருக்கோயிலில் ஜீரணோத்தாரண அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேக விழா நாளை (02.12.2022) வெள்ளிக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெறுகின்றது.

கலசபாக்கத்தில் வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டி!

பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக, மாணவர்களின் கலைத் திறன்களை ஊக்கப்படுத்தும் விதமாக, கலசபாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் நடைபெற்று வருகிறது. மேலும், கலசபாக்கம் வட்டாரத்தில் உள்ள பள்ளிகளில் இருந்தும் மாணவ,…

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2022 – நான்காம் நாள் இரவு!

 திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நான்காம் நாளான நேற்று (30.11.2022) இரவு வெள்ளி காமதேனு, கற்பக விருட்சம் வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் மாட வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்கள்.

திருவண்ணாமலை கார்த்திகை தீபம் திருவிழா 2022 – நான்காம் நாள் காலை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நான்காம் நாளான இன்று (30.11.2022) காலை சந்திரசேகரர் உண்ணாமுலை அம்மன் நாக வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் மாட வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருவண்ணாமலை கார்த்திகை தீபம் திருவிழா 2022 – மூன்றாம் நாள் இரவு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா மூன்றாம் நாளான நேற்று (29.11.2022) இரவு சிம்ம மற்றும் வெள்ளி அன்ன வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் மாட வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

திருவண்ணாமலை கார்த்திகை தீபம் திருவிழா 2022 – மூன்றாம் நாள் காலை!

 திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா மூன்றாம் நாளான இன்று (29.11.2022) காலை விநாயகர், சந்திரசேகரர் பூத வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் மாட வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  

திருவண்ணாமலை மாவட்டத்தில் தீபத் திருவிழாவை முன்னிட்டு டிச.6 உள்ளூர் விடுமுறை!

திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் 06.12.2022 (செவ்வாய்க்கிழமை)  ஒரு நாள் மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் திரு. பா. முருகேஷ் அவர்கள் உத்தரவு.

திருவண்ணாமலை கார்த்திகை தீபம் திருவிழா 2022 – இரண்டாம் நாள் இரவு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா இரண்டாம் நாளான நேற்று (28.11.2022) இரவு வெள்ளி இந்திர வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் மாட வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.