Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் அருள்மிகு பூமாரியம்மன் பூ பல்லக்கில் வீதி உலா!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (11.08.2022) ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு அருள்மிகு பூமாரியம்மன் பூ பல்லக்கில் வீதி உலா வரும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.

கலசபாக்கம் மேல்சோழங்குப்பம் தொடக்கப்பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி!

கலசபாக்கம் மேல்சோழங்குப்பம் தொடக்கப்பள்ளியில் போதை பழக்கத்திற்கு எதிராக மாணவர்கள் உறுதிமொழி ஏற்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மேல்சோழங்குப்பம் தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர் திரு.வேலுகலைச்செல்வன் அவர்கள்  தலைமையில் நடைபெற்ற போதைப் பொருட்களுக்கு எதிரான உறுதிமொழியை…

கலசபாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருத்தேர் பிரமோற்சவ திருவிழா Day 10!

கலசபாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருத்தேர் பிரமோற்சவ திருவிழா பத்தாம் நாள் நேற்று (11.08.2022) வியாழக்கிழமை காமதேனு வாகனத்தில் அம்மன் திருவீதி உலா மற்றும் இரவு வானவேடிக்கை நடைபெற்றது.

கலசபாக்கம் பஜார் வீதியில் அம்மனுக்கு பால்குடத்துடன் ஊர்வலம்!

கலசபாக்கம் பஜார் வீதியில் அமைந்துள்ள அருள்மிகு ஊத்துக்கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு இன்று (11.08.2022) பக்தர்கள் பால்குடங்களை எடுத்து கொண்டு ஊர்வலமாகச் சென்று அம்மனை வழிபட்டனர்.

கலசபாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருத்தேர் பிரமோற்சவ திருவிழா Day 9!

கலசபாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருத்தேர் பிரமோற்சவ திருவிழா ஒன்பதாம் நாள் நேற்று (10.08.2022) புதன்கிழமை அன்னபச்சி வாகனத்தில் அம்மன் திருவீதி உலா, வானவேடிக்கை மற்றும் இரவு சிறப்பு…

கலசபாக்கம் – காப்பலூர் சாலையில் விதை பந்துகள் விதைக்கப்பட்டன!

JB Farm உருவாக்கப்பட்ட விதை பந்துகள் நேற்று கலசபாக்கம் – காப்பலூர் சாலையில் 105 விதை பந்துகள் விதைக்கப்பட்டது.இதில் குழந்தைகள் ஆர்வத்துடன் விதை பந்தை விதைத்தனர்.

சிவாயநம திருச்சிற்றம்பலம் ஸ்ரீலஸ்ரீ பூண்டி மகான் ஆற்று சாமிக்கு நாளை பௌர்ணமி பூஜை!

சிவாயநம திருச்சிற்றம்பலம் ஸ்ரீலஸ்ரீ பூண்டி மகான் ஆற்று சாமிக்கு நாளை காலை (11.08.2022) கலசப்பாக்கம் அண்ணாநகரில் பௌர்ணமி பூஜை சிறப்பாக நடைபெற உள்ளது. பூஜை முடிந்தபின் பக்தர்களுக்கு அன்னம் பாலிப்பு சிறப்பாக நடைபெறும் அது…

பற்களின் பாதுகாப்பு மற்றும் உடல் நலம் பற்றி Dr.வினோத்குமார் நேரடி விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி!

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் ஸ்ரீ முருகன் பல் மருத்துவமனை வழங்கும் பற்களின் பாதுகாப்பு மற்றும் உடல் நலம் பற்றி நேரடி விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி வரும் சனிக்கிழமை (13.08.2022) மாலை 4 மணி முதல் 5…

கலசபாக்கம் சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

ஆதமங்கலம் துணைமின் நிலையத்தில் நாளை வியாழக்கிழமை (11.08.2022) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் ஆதமங்கலம், புதூர், சிறுவள்ளூர், கெங்கவரம், கிடாம்பாளையம், மேல்சோழங்குப்பம், வீரளூர், சோழவரம், கேட்டவரம்பாளையம், பள்ளகொல்லை, ஆகிய பகுதிகளில் காலை 09.00…

ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1 தேர்வு தேதி மாற்றம்!

ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1 தேர்வு ஆகஸ்ட் 25 – 31 வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தற்போது செப்டம்பர் 10 முதல் 15 ஆம் தேதி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்…

ஆகஸ்ட் மாதத்திற்கான திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம் நேரம்!

ஆகஸ்ட் மாதத்திற்கான திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம் நாளை(11.08.2022) வியாழக்கிழமை காலை 10.16 மணிக்கு தொடங்கி நாளை மறுநாள் (12.08.2022) வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு நிறைவடைகிறது.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஆடி மாத பௌர்ணமி பிரதோஷம்!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (09.08.2022) ஆடி மாத பௌர்ணமி பிரதோஷம் முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.

கலசபாக்கம் அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை திருமாமுடீஸ்வரர் திருக்கோயிலில் ஆடி மாத பௌர்ணமி பிரதோஷம்!

கலசபாக்கம் அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை திருமாமுடீஸ்வரர் திருக்கோயிலில் ஆடி மாத பௌர்ணமி பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று (09.08.2022) நந்தி பகவானுக்கும், சுவாமிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் குத்துவிளக்கேற்றி துவக்கம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 8-வது தேசிய கைத்தறி தின விழாவினை முன்னிட்டு சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. முருகேஷ் இ.ஆ.ப அவர்கள் நேற்று குத்துவிளக்கேற்றி…

திருவண்ணாமலையில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் மறுவாழ்வுக்கான கட்டுப்பாட்டு அறையை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று போதைப் பொருட்கள் பயன்பாடு தடுப்பு மற்றும் மறுவாழ்விற்கான 24 மணி நேர உதவி தொலைபேசி எண்களுடன்(04175-233344, 233345, 9345478828) கூடிய கட்டுப்பாட்டு அறையினை மாவட்ட ஆட்சித்தலைவர்…

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நேற்று குறைதீர்வு நாள் கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நேற்று(08.08.2022) நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. முருகேஷ் இ.ஆ.ப அவர்கள் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

கலசபாக்கம் மற்றும் செய்யாற்றங்கரையோரம் வசிக்கும் பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

செங்கம் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக குப்பநத்தம் அணையில் நீர் நிரம்பி வருகிறது. எப்பொழுது வேண்டுமானாலும் அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்ற வாய்ப்புள்ளதால், கலசபாக்கம் மற்றும் செய்யாற்றங்கரையோரம் வசிக்கும் பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…

ஆடி 18- ஐ முன்னிட்டு கலசபாக்கம் – பூண்டி சாலையில் விதை பந்துகள் விதைக்கப்பட்டன!

ஆடி 18- ஐ முன்னிட்டு JB Farm-ல் உற்பத்தி செய்யப்பட்ட விதை பந்துக்கள் கலசபாக்கம் – பூண்டி சாலையில் 200 விதை பந்துகள் விதைக்கப்பட்டது.

கலசபாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருத்தேர் பிரமோற்சவ திருவிழா Day 7!

கலசபாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் திருத்தேர் பிரமோற்சவ விழா 7ம் நாள் இன்று (08.08.2022) திருத்தேர் திருவீதி உலா நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை…

கலசபாக்கம் நூலகத்தில் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவும் கைத்தறி நெசவாளர் தினத்தையும் கொண்டாட முடிவு!

ஆகஸ்ட் ஏழு நெசவாளர் தினம் ….இந்தியா முழுவதும் ஆகஸ்ட் 7 நெசவாளர் தினமாக கொண்டாட மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அதன்படி கலசபாக்கம் வட்டத்தில் ஆகஸ்ட் 14ஆம் தேதி கலசபாக்கம் நூலகத்தில் 75 ஆம்…

கலசபாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருத்தேர் பிரமோற்சவ திருவிழா Day 5!

கலசபாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருத்தேர் பிரமோற்சவ திருவிழா ஐந்தாம் நாள் சனிக்கிழமை (06.08.2022) ரிஷப வாகனத்தில் அம்மன் திருவீதி உலா மற்றும் இரவு வானவேடிக்கை நடைபெற்றது.